அருளாளர் பட்டம்

(முத்திப்பேறு பெற்ற பட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருளாளர் பட்டம் (முத்திப்பேறு பட்டம்) என்பது கிறித்தவ நம்பிக்கையைக் கடைப்பிடித்து, சிறப்பான விதத்தில் வாழ்ந்து இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் கத்தோலிக்க திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது சடங்குமுறை ஆகும். இது கத்தோலிக்க வழக்கத்தில் முத்திப் பேறுபெற்ற பட்டம் (Beatification) என்றும் அறியப்படுகிறது. இச்சொல் Beatus என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது. இதற்கு "பேறு பெற்றவர்" என்பது பொருள்.

புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வழக்கமான நான்கு படிகளில் இது மூன்றாவதாகும். முதல் படி "இறை ஊழியர் நிலை" எனவும், இரண்டாம் படி "வணக்கத்துக்குரிய நிலை" எனவும் அழைக்கப்படுகின்றன.

ஒருவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்டபின், மக்கள் அவரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வேண்டுதல்களை முன்வைக்கலாம். ஆனால் கோவில்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) அத்தகைய வேண்டுதல்களை நிகழ்த்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி தேவை. புனிதர் பட்டம் வழங்கப்பட்டபின் எல்லா வழிபாட்டு இடங்களிலும் அப்புனிதருக்கு வணக்கம் செலுத்தப்படலாம்.

கத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - "odium fidei") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும்.

அன்னை தெரேசாவுக்கு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அக்டோபர் 19, 2003 அன்று முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்
உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்
  இறை ஊழியர்   →   வணக்கத்திற்குரியவர்   →   அருளாளர்   →   புனிதர்  

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருளாளர்_பட்டம்&oldid=2221139" இருந்து மீள்விக்கப்பட்டது