முத்துக்கமலம் (இணைய இதழ்)

(முத்துக்கமலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)முத்துக்கமலம்
வெளியீட்டாளர் தாமரைச்செல்வி
இதழாசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி
வகை இணைய இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதமிருமுறை
முதல் இதழ் 01-06-2006
நிறுவனம் முத்துக்கமலம் இணைய இதழ்
நகரம் தேனி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி முத்துக்கமலம் இணைய இதழ்
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி
தேனி - 635 531,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் முத்துக்கமலம் இணைய இதழ்

வளர்ந்து வரும் கணினி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தில் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய இதழ்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. இவை அச்சில் வரும் இதழ்களைப் போன்று குறிப்பிட்ட வாசகர் எல்லைகள் எதுவுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கணினி அறிவுத் திறன் பெற்றவர்களை வாசகர்களாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த தமிழ் இணைய இதழ்கள் பல சுவையான செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இப்படித் தோன்றிய தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் இணைய இதழும் ஒன்று.

உள்ளடக்கம் தொகு

முத்துக்கமலம் இணைய இதழில்

என்று பல தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டு பல்சுவை இணைய இதழாக இருக்கிறது.

வகைப்பாடு தொகு

முத்துக்கமலம் இணைய இதழ் பல தலைப்புகளைக் கொண்டு அனைத்து வகையான தகவல்களை வழங்கி வருவதால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அது பல்சுவை இதழாகவும், அச்சு இதழ்கள் வெளியீட்டு முறைகளில் கால அளவுகளைப் பின்பற்றுவது போல் இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் புதுப்பிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. இதன் அடிப்படையில் மாதமிருமுறை (சுழற்சியில்) ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு தொகு

  • தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகரான தேனியில் இருந்து 01-06-2006 முதல் நடத்தப்பெறும் இந்த இணைய இதழ் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை வாசகர்களாகக் கொண்டுள்ளது.
  • இதில் சிறப்புப் பகுதிகளாக பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் , நினைவு அஞ்சலி போன்றவைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ஆய்விதழ் தொகு

இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் ஒன்றாக முத்துக்கமலம் இணைய இதழும் இடம் பெற்றிருக்கிறது.

வெளி இணைப்புகள் தொகு