முத்துச்சிப்பி
முத்துச்சிப்பிதொகு
வாழிடம்தொகு
முத்து சிப்பிகள் உப்புத்தன்மையுடனான வாழிடங்களில் வாழும். நம் நாட்டில் முத்து சிப்பிகள்,மன்னார் வளைகுடாவிலும், கட்சு வளைகுடாவிலும் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடாவில் கடற்கரையில் இருந்து 12-20 கி.மீ தூரத்திலும், 15 - 20 மீ ஆழப்பகுதிகளிலும், முத்து சிப்பி படுக்கைகள் காணப்படுகின்றன. முத்து சிப்பிகள் பைசஸ் என்னும் நார்களால் பாறைகளில் ஒட்டி வாழ்கின்றன. முத்து சிப்பிகள் அதிவேக நீரோட்டமற்ற, உப்புத்தன்மை மாறாத பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றன.
உணவு முறைதொகு
முத்து சிப்பிகள் தாவர நுண்ணுயிர் மிதவைகளை சலித்து உண்பவை. பிங்கிட்டேடா பியூக்கேட்டா என்னும் முத்து சிப்பிகள் நம் நாட்டில் முத்து சிப்பியாகும்.
இனப்பெருக்கம்தொகு
இது ஒவ்வொரு இனப்பெருக்க காலத்திலும் பலதடவை இனப்பெருக்கம் செய்கிறது. முத்துசிப்பியில் ஆண் , பெண் என்று இனங்கள் தனித்தனியாக இருந்தாலும் ஒரே உயிரில் ஆண் மற்றும் பெண்னினம் சேர்ந்து இருப்பதை காணலாம் . ஒரு முத்துச்சிப்பி 1.2 கோடி வரை முட்டைகளை வெளியிடுகிறது[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ மீன்வளப் பூக்கள் .... முனைவர் வெ சுந்தரராஜ்