முந்நீர் (உணவு)

மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து உண்ணும் பழக்கம் சங்ககாலத் தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இந்தக் கலவை நீரை முந்நீர் என்றனர். எவ்வி அரசன் ஆண்ட மிழலை நாட்டில் இருந்த நலூரை அடுத்திருந்த முத்தூறு தொன்முது வேளிரின் வளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர். பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர்.[1]

  • பார்க்கலாம் [2]

மேற்கோள் குறிப்பு தொகு

  1. வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
    முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
    இரும் பனையின் குரும்பை நீரும்,
    பூங் கரும்பின் தீம் சாறும்,
    ஓங்கு மணல் குவவுத் தாழைத்
    தீம் நீரொடு உடன் விராஅய்,
    முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
    தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
    ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
    புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
    கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
    பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
    குப்பை நெல்லின், முத்தூறு தந்த
    கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! -புறநானூறு 24

  2. A kind of trio-cocktail mix used by the Tamils in 2nd century B.C. - created as per source, poem # 24 in PURANAANUURU, an anthology belongs to SANGAM period.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்நீர்_(உணவு)&oldid=1791590" இலிருந்து மீள்விக்கப்பட்டது