முயல் வளர்ப்பு

தமிழ்நாட்டில் வளர்ப்புக் கோழிகள், வான்கோழிகள் போன்று இறைச்சிக்கான முயல் வளர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ப்பு முயல்கள் அசைவ உணவகங்களில் ஒரு உணவாக தற்போது வந்து விட்டதால் இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். முயல் வளர்ப்பின் பொழுது ஒரு வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 வரை குட்டி போடும். குட்டி போட்டு 6 வாரம் வரை குட்டிகளை தாய் முயலிடம் இருந்து பிரிக்க கூடாது. ஆண் முயல்களை ஒன்றாக வளர்க்க கூடாது . ஒன்றாக வளர்க்கும் பொழுது அவைகள் ஒன்றை ஒன்று கடித்து கொள்ளும். 2 அல்லது 3 பெண் முயலுக்கு ஒரு ஆண் முயல் போதுமானது. 1 1/2 முதல் 2 அடி ஒரு முயலுக்கு போதுமானது .

முயல் வளர்ப்பு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முயல்_வளர்ப்பு&oldid=2881340" இருந்து மீள்விக்கப்பட்டது