முஸ்லிம் நேசன் (இந்திய இதழ்)

முஸ்லிம் நேசன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1957ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். முஸ்லிம் நேசன் எனும் பெயரில் அவ்வப்போது இலங்கையிலும் இந்தியாவிலும் சில இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன. இலங்கையில் அறிஞர் மு. கா. சித்திலெவ்வையை ஆசிரியராகக் கொண்டு 1883ம் ஆண்டில் இப்பெயரில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. 1907ம் ஆண்டில் இந்தியா சென்னையிலிருந்து முஸ்லிம் நேசன் எனும்பெயரில் வாராந்த இதழொன்று வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர் தொகு

  • ஆலை நற்றலைவன் (சயீத் முகம்மத் இபுராகீம்)

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் முஸ்லிம் உலக செய்திகளுக்கும், இந்திய முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.