மு. இராமநாதன்

தமிழக அரசியில்வாதி

கோவை மு இராமநாதன் அல்லது மு. இராமநாதன் (M. Ramanathan) என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1984, 1989 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் கோயம்புத்தூர் மேற்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்ற உறுப்பினாக பணியாற்றினார்.[1][2] மேலும் 1996 ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் திமுகவில் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டச் செயலாளர், தணிக்கைக்குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் 2019 மே 10 அன்று தன் 87ஆம் வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராமநாதன்&oldid=3255042" இருந்து மீள்விக்கப்பட்டது