மு. கருப்பையா

மு. கருப்பையா (பி: 1941) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியத் தமிழ்க் கவியுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் புனைபெயர் காரைக்கிழார் என்பதாகும்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

இவர் 1958 முதல் எழுத்துத்துறையிலும், கவிதைத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். நூற்றுக்கணக்கான கவிதைகளை யாத்துள்ள இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. 2000-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் ' உலகத் தமிழ் கவிதை மாநாடு' இவரது தலைமையில் நடந்தேறியது. இவர், கோலாலம்பூரின் 'முச்சங்கத்தின்' தலைவராக இருந்து சேவையாற்றி வருகிறார்.

நூல்கள் தொகு

  • 'அலை ஓசை' முழு நீளக் காவியம், 1975
  • 'கணை' கவிதை நூல்
  • 'பயணம்' நாவல்

மேலும் சில நூல்களை இவர் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கவியரங்குகள் தொகு

மலேசியாவில் பரந்துபட்ட ரீதியில் இவர் பல கவியரங்குகளை நடத்தியும் பாடியும் உள்ளார். மேலும், இசைப்பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கருப்பையா&oldid=3448391" இலிருந்து மீள்விக்கப்பட்டது