மு. க. தமிழரசு

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

மு. க. தமிழரசு (ஆங்கில மொழி: M. K. Tamilarasu) என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனாவார்.[1] தனது மோகனா மூவீஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்பட விநியோகமும், மனை வணிகமும் செய்து வருகிறார்.

மு. க. தமிழரசு
பிறப்புமுத்துவேல் கருணாநிதி தமிழரசு & (மு. க. தமிழரசு)
கோபாலபுரம், சென்னை
இருப்பிடம்கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், சென்னை
பணிதயாரிப்பாளர்
அரசியல் இயக்கம்திமுக
பெற்றோர்கருணாநிதி தயாளு அம்மாள்
வாழ்க்கைத்
துணை
மோகனா
பிள்ளைகள்அருள்நிதி, பூங்குழலி
உறவினர்கள்மு. க. அழகிரி, மு. க. ஸ்டாலின், கனிமொழி

குடும்பம் தொகு

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தார்.[2]இவருடன் பிறந்தவர்கள் மு. க. அழகிரி மற்றும் மு. க. ஸ்டாலின் என இரண்டு மூத்த சகோதர்களும் மு.க.செல்வி என்ற மூத்த சகோதரியும் இவருக்குள்ளனர். மு. க. தமிழரசு அவர்களுக்கு மோகனா என்ற மனைவியும் அருள்நிதி என்ற மகனும், பூங்குழலி என்ற மகளும் உள்ளனர். இவரின் மருமகள் கீர்த்தனா மற்றும் மருமகன் விஸ்வநாதன் ஆவார்கள்.[3][4]

தயாரித்த திரைப்படங்கள் தொகு

தனது மோகனா மூவீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்.

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்பு
2010 வம்சம் அருள்நிதி, சுனைனா பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2011 மௌன குரு அருள்நிதி, இனியா
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் அருள்நிதி, பிந்து மாதவி
2015 டிமாண்டி காலனி அருள்நிதி

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "M.K. Tamilarasu". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  2. "Explainer: 4 generations of Karunanidhi's family tree and why MK Stalin, Kanimozhi can be his political heirs". timesnownews.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  3. "ஹேப்பி காலனி!". விகடன். https://www.vikatan.com/anandavikatan/2015-nov-11/cinema-news/112258.html. பார்த்த நாள்: 28 December 2018. 
  4. "மு.க. தமிழரசு மருமகன் கட்டடத்துக்கு சீல்". விகடன். https://www.vikatan.com/news/tamilnadu/15927.html. பார்த்த நாள்: 28 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._தமிழரசு&oldid=2946773" இலிருந்து மீள்விக்கப்பட்டது