மூன்றாம் தூத்மோஸ்

மூன்றாம் தூத்மோஸ் (Thutmose III) (variously also spelt Tuthmosis or Thothmes) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஆறாவது பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1479 முதல் கிமு 1425 முடிய 54 ஆண்டுகள் ஆண்டார். இருப்பினும் தனது 22-வயது வரை, தன் சார்பாக இவரது பெரியம்மா ஆட்செப்சுட்டு என்பர் அரசப் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டார்.

மூன்றாம் தூத்மோஸ்
மனாபிர்யா என அமர்னா நிருபங்களில் உள்ளது.
மூன்றாம் தூத்மோசின் சிற்பம், லக்சர் அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1479 – கிமு 1425, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்அரசி ஆட்செப்சுட்டு
பின்னவர்இரண்டாம் அமென்கோதேப் (மகன்)
துணைவி(யர்)சதியா[2] & 4
பிள்ளைகள்இரண்டாம் அமென்கோதேப் & 8 [2]
தந்தைஇரண்டாம் தூத்மோஸ்
தாய்இசெத்
பிறப்புகிமு 1481
இறப்புகிமு 1425 (வயது 56)
அடக்கம்KV34
நினைவுச் சின்னங்கள்கிளியோபாட்ராவின் ஊசி
மூன்றாம் தூத்மோஸ் நிறுவிய கல்தூபி, இஸ்தான்புல், துருக்கி
மூன்றாம் தூத்மோசின் சிற்பம், வியன்னா

பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் தெற்கு எகிப்தை ஒட்டிய நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் உள்ள வடக்கு சிரியா மற்றும் பாபிலோன் பகுதிகளை கைப்பற்றிய செய்திகள் குறித்து அமர்னா நிருபங்கள் மூலம் வெளிப்படுகிறது. இவரது கல்லறை மன்னர்களின் சமவெளியில் உள்ளது.[3][4][5]இவர் எகிப்தில் புதிதாக ஒப்பெத் திருவிழாவைத் துவக்கி வைத்தார். மூன்றாம் தூத்மோஸ் நிறுவிய கல்தூபி, தற்போது துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ளது.

பார்வோன்களின் அணிவகுப்பு தொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது.[6][6]

ஆட்சிக் காலம் தொகு

 
மேல் எகிப்தில் மூன்றாம் தூத்மோசின் சிற்பம்

மூன்றாம் தூத்மோஸ் பண்டைய் எகிப்தை கிமு 1479  முதல் கிமு 1425  முடிய 54 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு ஆண்டார். மூன்றாம் தூத்மோசின் ஆட்சிக் காலம் குறித்த குறிப்புகள் அவரது படைத்தலைவர் அமென்கொதேப்-மாகுவின் கல்லறையில் குறிக்கப்பட்டுள்ளது.[7] தூத்மோசின் 54வது ஆட்சி ஆண்டின் போது இறந்தார் என அமென்கொதேப்-மாகுவின் கல்லறையில் குறிக்கப்பட்டுள்ளது.[8][9][10]

மூன்றாம் தூத்மோசின் படையெடுப்புகள் தொகு

 
தூத்மோசின் வெளிநாடுப் படையெடுப்புகளுக்குப் பின்னர் கர்னாக் கோயிலிலில் தெய்வங்களுக்கு படையல் போடும் காட்சி

போரில் திறன் படைத்த மூன்றாம் தூத்மோஸ் தனது ஆட்சியின் 20 ஆண்டுகளில் 16 முறை வெளிநாடுகளின் மீது படையெடுத்தார்.[11][12][13] இவர் போரில் நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் உள்ள 350 நகரங்களைக் கைப்பற்றினார். பண்டைய அண்மை கிழக்கில் உள்ள மெசொப்பொத்தேமியாவின் யூப்பிரடீஸ் ஆற்றை முதன்முதலில் கடந்து சென்று படையெடுத்த பெருமை பெற்ற முதலாம் தூத்மோசிற்குப் பின்னர், மூன்றாம் தூத்மோஸ் மித்தானி இராச்சியத்தைக் கைப்பற்றி இப்பெருமை பெற்றார்.

மூன்றாம் தூத்மோஸ் தனது வெளிநாட்டு படையெடுப்புகள் குறித்து கர்னாக் எனுமிடத்தில் உள்ள கடவுள் அமூன் கோயில் சுவர்களில் குறிப்புகள் எழுதிவைத்தார். இவர் படையெடுப்புகளால் தனது ஆட்சி அதிகாரத்தை வடக்கில் சிரியா முதல், தெற்கில் நூபியா வரை நிலைநாட்டினார்.[14][15]மேலும் ஏஜியன் கடலில் உள்ள பல தீவுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.[16]இவர் மத்தியதரைக் கடலில் உள்ள சைப்பிரஸ் தீவு நாட்டிலிருந்தும் திறை வசூலித்தார்.[17]இவரது இராணுவம் நடுநிலக் கடல் செல்வதற்கு போர்ப் படகுகளை பாலைவனப் பகுதிகளிலிருந்து எடுத்துச் சென்றனர்.[18]

இறப்பு மற்றும் அடக்கம் தொகு

மூன்றாம் தூத்மோசின் கல்லறயை மன்னர்களின் சமவெளியின் தேர் எல் பகாரி பகுதியில் கல்லறை எண் 34-இல், தொல்லியல் அறிஞர் விக்டர் லோரெட் என்பவரால் 1898-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வண்ண வணண ஓவியங்களால் அலக்கரிக்கப்பட்ட மூன்றாம் தூத்மோசின் கல்லறைச் சுவரில், இறப்புக்கு பிந்தைய வாழ்க்கைக்கான நூலின் வரிகள் முழுவதும் குறிக்கப்பட்டுள்ளது.

மம்மி தொகு

தேர் எல் பகாரி பகுதியில் உள்ள கல்லறை எண் 34-இல் உள்ள மூன்றாம் தூத்மோசின் நினைவுக் கோயிலில் 1881-ஆம் ஆண்டில் அவரது மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 1994. p. 104
 2. 2.0 2.1 Dodson, Aidan. Hilton, Dyan. The Complete Royal Families of Ancient Egypt, Thames and Hudson. p132. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3
 3. Thutmose III, KING OF EGYPT
 4. Thutmose III
 5. Thutmose III
 6. 6.0 6.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 
 7. Redford, Donald B. The Chronology of the Eighteenth Dynasty. Journal of Near Eastern Studies, Vol 25, No 2. p.119. University of Chicago Press, 1966.
 8. Breasted, James Henry. Ancient Records of Egypt, Vol. II p. 234. University of Chicago Press, Chicago, 1906.
 9. Murnane, William J. Ancient Egyptian Coregencies. p.44. The Oriental Institute of the University of Chicago, 1977.
 10. Jürgen von Beckerath, Chronologie des Pharaonischen Ägypten. Mainz, Philipp von Zabern, 1997. p.189
 11. Lichtheim, Miriam (2019). Ancient Egyptian Literature (in ஆங்கிலம்). Univ of California Press. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-30584-7. பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
 12. Strudwick, Helen (2006). The Encyclopedia of Ancient Egypt. New York: Sterling Publishing Co., Inc. pp. 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4351-4654-9.
 13. J.H. Breasted, Ancient Times: A History of the Early World; An Introduction to the Study of Ancient History and the Career of Early Man. Outlines of European History 1. Boston: Ginn and Company, 1914, p.85
 14. page v–vi of the Preface to Thutmose III: A New Biography, University of Michigan Press, 2006
 15. "Thutmose". Britannica. 
 16. "Ancient Egypt's Greatest Warrior: TuthmosIs The 3rd – Egypt's Napoleon (Full History Documentary)". dokus4free (in அமெரிக்க ஆங்கிலம்). 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
 17. "Google Translate". translate.google.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
 18. Faulkner, R. O. (1946). The Euphrates Campaign of Tuthmosis III. The Journal of Egyptian Archaeology. பக். 39–42. 

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thutmosis III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தூத்மோஸ்&oldid=3797318" இலிருந்து மீள்விக்கப்பட்டது