திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் என்ற மூன்று நாயன்மார்களும் மூவர் என்று அழைக்கப்படுவர். இவர்கள் பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என்று அழைக்கப்படும் முதல் ஏழு தொகுப்புகளை இயற்றியவர்கள். தேவாரங்களை இயற்றியதால் ‘தேவார மூவர்' எனவும் முதன்மையானவர்கள் என்பதால் ‘மூவர் முதலிகள்’ எனவும் போற்றப்படுவர்

இவர்களோடு எட்டாம் திருமுறை இயற்றிய மாணிக்கவாசகரும் இணைய அவர்கள் 'நால்வர்' என்றும் ‘சமயக்குரவர்’ என்றும் ஒருங்கே போற்றப்படுவர். சிவாலயங்களில் இவர்களுக்கென்று தனி இடமும் சிறப்பு பூசையும் உண்டு.[1]

உசாத்துணைகள்தொகு

  1. "மூவர்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவர்&oldid=2419723" இருந்து மீள்விக்கப்பட்டது