மெகுதி பட்டினம்

தெலங்கானாவின் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதி
(மெக்திபட்டணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெகுதி பட்டினம் (Mehdipatnam) என்பது இந்தியாவின் ஐதராபாத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய இடமாகும். நிசாமின் ஆட்சிக் காலத்தில் ஐதராபாத் இராச்சியத்தில் வாழ்ந்த அரசியல்வாதியும், அதிகாரத்துவமும் மற்றும் சிறந்த ஆளுமையுமாக இருந்த மெக்தி நவாஸ் ஜங் என்பவரின் பெயரிடப்பட்டது. இது பஞ்சாரா ஹில்ஸ், அமீர்பேட்டை, பேகம்பேட்டை, குக்கட்பள்ளி, நம்பள்ளி, முசீராபாத் போன்ற முக்கிய புறநகர்ப் பகுதிகளிலிருந்து பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலை வழியாக இராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்துடன் இணைப்பை வழங்குகிறது. இது காச்சிபௌலி மற்றும் மாதாபூரின் தகவல் தொழில்நுட்ப நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது.

மெகுதி பட்டினம்
அண்டைப்பகுதி
மெகுதி பட்டினம் is located in தெலங்காணா
மெகுதி பட்டினம்
மெகுதி பட்டினம்
Location in Telangana, India
மெகுதி பட்டினம் is located in இந்தியா
மெகுதி பட்டினம்
மெகுதி பட்டினம்
மெகுதி பட்டினம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°23′45″N 78°25′52″E / 17.3959°N 78.4312°E / 17.3959; 78.4312
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்
Metroஐதராபாத்து (இந்தியா)
பெயர்ச்சூட்டுமெக்தி நவாசு ஜங்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500 028
வாகனப் பதிவுடிஎஸ்-13
மக்களவைத் தொகுதிசிக்கந்தராபாத்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிநம்பள்ளி

வணிக பகுதி

தொகு

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த நகரம் மகத்தான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பல புறநகர்ப் பகுதிகளுக்கு வணிகம் செய்யும் மையமாகும். இப்பகுதி எப்போதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். 'ரயத்து பஜார்' என்ற ஒரு காய்கறி சந்தை இங்கே உள்ளது. இது புதிய காய்கறிகளை வாங்குவதற்கு நல்ல இடமாக அமைகிறது .

தங்க சந்தை

தொகு

இப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ள ஒகாஸ் வளாகத்தில் முஸ்தபா நகைக்கடை, [1] சிறீ கிருட்டிணா நகைக்கடை, டேனிஷ் நகைக்கடை போன்ற உள்ளூர் நகைகள் அமைந்துள்ளன.

தெருவோர வியாபாரிகள்

தொகு

இந்நகரத்தின் பரபரப்பான சாலைகளில், பொம்மைகள், உணவுகள், பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்கள் மற்றும் ஆடைகளை விற்கும் ஏராளமான தெரு விற்பனையாளர்களைக் காணலாம். தெருக்களில் வணிகம் கடைகளைப் போலவே வளர்ந்து வருகிறது.

உணவு

தொகு

இங்குள்ள பல உணவகங்கள் ஐதராபாத் உணவை வழங்குகின்றன. சப்வே, மெக்டொனால்டு, டொமினோஸ், கே எப் சி, கோலி வட பாவ் மற்றும் பிஸ்ஸா ஹட் போன்ற உணவு சங்கிலி கடைகள் சமீபத்தில் இங்கு அமைக்கப்பட்டன. சுவாதி சிற்றுண்டி உணவு விடுதி என்பது பழமையான ஒன்றாகும். இது உள்ளூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு விடுதியாகும். பல துரித உணவு மற்றும் சிற்றுண்டி மையங்கள், தேநீர் கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள் ஆகியவையும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகுதி_பட்டினம்&oldid=3052921" இலிருந்து மீள்விக்கப்பட்டது