மெக்ராலி தொல்பொருள் பூங்கா

மெராலி தொல்பொருள் பூங்கா (Mehrauli Archaeological Park) என்பது தில்லியின் மெக்ராலியில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் பகுதியாகும். இது குதுப் மினார் உலக பாரம்பரிய தளம் மற்றும் குதுப் மினார் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது 100 க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. தில்லியில் 1,000 ஆண்டுகால தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு அறியப்பட்ட ஒரே பகுதி இதுவாகும். மேலும் பொ.ச. 1060 இல் தோமரா அரசபுத்திரர்களால் கட்டப்பட்ட லால் கோட்டின் இடிபாடுகள் இதில் அடங்கும். இது தில்லியின் மிகப் பழமையான கோட்டையாகவும், கில்சி வம்சத்தின் ஆட்சி, துக்ளக் வம்சம், தில்லி சுல்தானகத்தின் லோதி வம்சம், முகலாயப் பேரரசு மற்றும் பிரித்தானிய இராச்சியம் போன்றவற்றின் அடுத்தடுத்த கால கட்டடக்கலை நினைவுச்சின்னங்களாகவும் உள்ளது.

குதுப் மினாரைக் கண்டும் காணாத குலி கானின் கல்லறை.
சமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை வளாகம் பொ.ச. 1528-1529 இல் மெக்ராலி தொல்பொருள் பூங்காவில் கட்டப்பட்டது.

கண்ணோட்டம் தொகு

இந்த பூங்காவில் கி.பி 1287 வருடத்திய பால்பன் கல்லறை போன்ற தளங்கள் உள்ள., இதில் உள்ள வளைவு மற்றும் குவிமாடம் இந்தியாவில் முதல் முறையாக கட்டப்பட்டது, [1] ஜமாலி கமாலி மசூதி மற்றும் மௌலானா ஜமாலி கமாலி ( ஜமாலி கம்போ ) கல்லறை, 1526 - பொ.ச. 1535, குலி கானின் கல்லறை, படிக்கிணறுகளான காந்தக் கிணறு, ராஜோன் கிணறு, மற்றும் மதி மஸ்ஜித் ஆகியவை. [2] ஜகாஸ் மகால், இரண்டாம் பகதூர் சாவின் சாபர் மகால், கவுசி-இ-சம்சி மற்றும் ஆதாம் கானின் கல்லறை ஆகியவற்றின் நினைவுச்சின்னங்கள் ஆகியவை. பல பழைய கோயில்களின் தூண்கள் மற்றும் எச்சங்களும் பூங்காவில் சிதறிக்கிடக்கின்றன.

மறுவளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொகு

 
ரோஜாத் தோட்டம், மெக்ராலி தொல்பொருள் பூங்கா.

தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் , மாநில தொல்பொருள் துறை, தில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய தேசிய அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து 1997 ஆம் ஆண்டில் தொல்பொருள் பூங்காவாக இந்த பகுதி மறுவடிவமைப்பு மற்றும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கத் தொடங்கியது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH), இது முதலில் இப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளின் முறையாக ஆவணப்படுத்தத்த் தொடங்கியது. மேலும் 2000 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய நடைகளை நடத்தத் தொடங்கியது. [3] [4]

பல ஆண்டுகளாக, இன்டாக் பூங்காவில் சுமார் 40 நினைவுச்சின்னங்களை மீட்டெடுத்ததுடன், அடையாளங்கள், பாரம்பரிய தடங்கள் மற்றும் மணற்கல் பாதை-குறிப்பான்களைச் சேர்த்தது. [1]

குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டமைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Discover new treasures around Qutab". தி இந்து. 28 Mar 2006. Archived from the original on 10 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 19 Feb 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help).
  2. Half Day Itinerary Delhi Tourism.
  3. "A successful conservation story". The Hindu இம் மூலத்தில் இருந்து 2004-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040312120350/http://www.hindu.com/2004/02/09/stories/2004020908600300.htm. 
  4. "Unkempt and uncared for". The Hindu. http://www.thehindu.com/news/cities/Delhi/unkempt-and-uncared-for/article4298773.ece.