மெட்ஜெட் மீன்

மெட்ஜெட் (Medjed) என்பது யானைக்குடும்ப மீன் இனமாகும். பண்டைய எகிப்தின் சமயத்தில் ஆக்சிரைஞ்சசு நகரத்தில் இம்மீனை வணங்கியுள்ளனர். எகிப்து கடவுளான ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக, இவரது சகோதரர் சேத், ஒசிரிசினை கொன்று உடலைத் துண்டுகளாக்கி ஆற்றில் வீசி விடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களைப் பெண் கடவுளான இசிசு ஒன்று சேர்க்கிறார். ஆனால் அப்போது ஆணுறுப்பு மட்டும் காணப்படவில்லை. சிதறடித்த ஒசிரிசியின் ஆண்குறியை இந்த மீன்கள் சாப்பிட்டு விட்டதாக நம்பப்படுகிறது. ஒரு தீர்வாக மேல் எகிப்தில், பெர்-மெட்ஜெட் என இந்த மீன் இனத்திற்குப் பெயரிடப்பட்டது. தற்பொழுது இது கிரேக்கம் மொழியில் ஆக்சிரைஞ்சசு என அறியப்படுகிறது.[1]

ஆக்சிரைஞ்சசு மீனின் வெண்கல சிலைகள்

யானை மீன் (துணைக்குடும்பம் மோர்மிரைனே) நைல் நதியில் அதிகமாகக் காணப்படும் நடுத்தர அளவிலான நன்னீர் மீன்கள். இவை பல்வேறு எகிப்தின் மற்றும் பிற கலைப்படைப்புகளில் காணப்படுகின்றன. மோர்மைரிட் இனங்கள் சிலவற்றுக்குத் தனித்துவமான கீழ்நோக்கிய மூஞ்சியினைக் கொண்டது. இதனால் இம்மீன்கள் யானை மூஞ்சி எனப் பொதுவான பெயர் பெறுகிறது. புனிதமான மெட்ஜெட் மீன்களில் ஒன்றான ஆக்சிரைஞ்சசு மோர்மைரிட்களின் பொதுவான பல பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு நீண்ட குத துடுப்பு, ஒரு சிறிய வால் துடுப்பு, பரவலான இடைவெளியுடன் கூடிய இடுப்பு மற்றும் மாரிபு துடுப்புகள் மற்றும் கீழ்நோக்கிய முகம்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Blumell, Lincoln H. (2012). Lettered Christians: Christians, Letters, and Late Antique Oxyrhynchus. BRILL. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004180987.  Fn. 3 and 4, referring also to Plutarch, De Iside et Osiride 353C.
  2. "Bronze statuette of Oxyrhynchus fish: date uncertain". Imaging Papyri Project. 1998. பார்க்கப்பட்ட நாள் 25 May 2007.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ஜெட்_மீன்&oldid=3174395" இலிருந்து மீள்விக்கப்பட்டது