மெதினா வார்தா ஆலியா

இந்தோனேசிய சதுரங்க வீராங்கனை

மெதினா வார்தா ஆலியா (Medina Warda Aulia) என்பவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார் [1]. இவர் 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் ஆம் நாள் யகார்த்தாவில் பிறந்தார்.2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் [2] என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

மெதினா வார்தா ஆலியா Medina Warda Aulia
ஏதென்சில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் மெதினா வார்தா ஆலியா.
முழுப் பெயர்மெதினா வார்தா ஆலியா
நாடுஇந்தோனேசியா
பிறப்பு7 சூலை 1997 (1997-07-07) (அகவை 26)
யகார்த்தா, இந்தோனேசியா
பட்டம்பெண் கிராண்டு மாசுட்டர் (2013)
உச்சத் தரவுகோள்2397 (ஆகத்து 2014)

சாதனைகள் தொகு

  • 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான 4 ஆவது உலகப் பள்ளிகள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் வெற்றி
  • 010 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 ஆவது ஆசிய மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுப் போட்டியில் வெற்றி
  • 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 ஆவது ஆசியப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் வெற்றி.
  • 2011 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் தனிநபர் விரைவு சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.
  • 2013 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் தனிநபர் விரைவு சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Calon Grand Master Termuda". Tempo இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150119114920/http://www.tempo.co/read/news/2011/04/09/104326314/Calon-Grand-Master-Termuda. பார்த்த நாள்: 10 August 2014. 
  2. "FIDE Chess Profile". பார்க்கப்பட்ட நாள் 10 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதினா_வார்தா_ஆலியா&oldid=3857055" இலிருந்து மீள்விக்கப்பட்டது