மென்பொருள் செயற்றிட்ட மேலாண்மை

மென்பொருள் செயற்றிட்ட மேலாண்மை என்பது மென்பொருள் திட்டங்களை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்லும் கலை மற்றும் அறிவியல் ஆகும்.[1] இது ஒரு செயற்றிட்ட மேலாண்மையின் துணை துறையாகும்.

வரலாறுதொகு

1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் கணினித்துறை மிக விரைவாக வளர்ந்த நேரத்தில் கணினி மென்பொருள் நிறுவனங்கள் குறைந்த செலவில் அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள் உற்பத்தி செய்ய விரும்பினர். புதிய வளர்ச்சி முயற்சிகளை நிர்வகிக்க மென்பொருள் நிறுவனங்கள் நிறுவப்பட்ட செயற்றிட்ட மேலாண்மை முறைகளை பயன்படுத்தினர், ஆனால் பயனர் வேண்டப்படுவன்ற்றிர்க்கும் மற்றும் வழங்கப்படும் மென்பொருளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன, மேலும் செயற்றிட்ட கால அட்டவணைகள், சோதனையோட்டம் தவறிவிட்டன.


தொழில் வளர்ச்சியடைந்த நிலையில், மென்பொருள் செயற்றிட்ட மேலாண்மை தோல்விகளை பகுப்பாய்ந்து பின்வரும் பொதுவான காரணங்களாக உள்ளன என்று கன்டறியப்பட்டது[2]:

 1. நம்பத்தகாத அல்லது சரியான விளக்கமில்லாபத திட்டம் இலக்குகள்
 2. தேவையான வளங்களை தவறான மதிப்பீடு செய்தல்
 3. மோசமாக வரையறுக்கப்பட்ட கணினி தேவைகள்
 4. செயற்றிட்டத்தின் அறிக்கை மோசமாக சமரப்பித்தல்
 5. நிர்வகிக்கப்படாத இடர்கள்
 6. வாடிக்கையாளர்கள், டெவலப்பர்கள், மற்றும் பயனர்கள் மத்தியில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமை
 7. முதிராத தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
 8. செயற்றிட்டத்தின் சிக்கலான விடயங்களை கையாள இயலாமை
 9. கவனக்குறைவான அபிவிருத்தி நடைமுறைகள்
 10. மோசமான செயற்றிட்ட மேலாண்மை
 11. செயற்றிட்ட பங்குபற்றுவோரின் அரசியல்
 12. வியாபார அழுத்தம்

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Stellman, Andrew; Greene, Jennifer (2005). Applied Software Project Management. O'Reilly Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-596-00948-9. http://www.stellman-greene.com/aspm/. 
 2. IEEE magazine article "Why Software Fails"