மெஷ்வா ஆறு (Meshwo or Meshwa), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்கில் மற்றும் நடுவில் பாயும் ஆறு ஆகும்.[1] மெஷ்வா ஆறு சபர்மதி ஆற்றின் துணை ஆறு ஆகும். மேலும் வத்ரக் ஆற்றின் உதவி துணை ஆறாகும்.[2]ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள பஞ்சரா மலையில் மழைக்காலங்களில் உற்பத்தியாகும் மெஷ்வா ஆறு, இராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டம் வழியாகப் பாய்ந்து, குஜராத் மாநிலத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் ஷாம்ளாஜி வழியாக நுழைந்து[3] அகமதாபாத் நகரத்தில் பாயும் சபர்மதி ஆற்றுடன் கலக்கிறது. மெஷ்வா ஆற்றின் மொத்த நீளம் 230 கிலோ மீட்டர் ஆகும்.

மெஷ்வா ஆறு
மெஷ்வா நீர்த்தேக்கம், ஷாம்ளாஜி, ஆரவல்லி மாவட்டம், குஜராத் இந்தியா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத், இராஜஸ்தான்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
22°48′03″N 72°39′48″E / 22.8009°N 72.6632°E / 22.8009; 72.6632
நீளம்203 கிலோ மீட்டர்

வடிநிலம்

தொகு

ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தி ஆகும் மெஷ்வா ஆறு குஜராத் மாநிலத்தின் ஆரவல்லி மாவட்டம், பனஸ்கந்தா மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம் வழியாக பாய்கிறது.[4]

நீர் தேக்கங்கள்

தொகு

1950ஆம் ஆண்டில் இதர் இராச்சியத்தினர் மெஷ்வா ஆற்றின் குறுக்கே ஷாம்ளாஜி அணை கட்டினர். குஜராத் அரசு 1968-69களில் ஷாம்ளாஜி அருகே மெஷ்வா ஆற்றின் குறுக்கே மற்றொரு அணை கட்டினர்.

மெஷ்வா ஆற்றாங்கரையின் குறிப்பிடத்தக்கவைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sabarmati Basin Report: Basin Sub Basin (in ஆங்கிலம்). Central Pollution Control Board. 1989. p. 6.
  2. Rathore, Shaurya Singh (2018-01-17). Rajasthan Geography (in ஆங்கிலம்). RajRAS. p. 88.
  3. General, India Office of the Registrar (1965). Census of India, 1961: Gujarat (in ஆங்கிலம்). Manager of Publications. pp. 249–250.
  4. Rajgor, Shivprasad (August 2002). "મેશ્વો (નદી)". Gujarati Vishwakosh (1st) XVI. Ahmedabad: Gujarat Vishwakosh Trust. இணையக் கணினி நூலக மையம் 163322996. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஸ்வா_ஆறு&oldid=4090343" இலிருந்து மீள்விக்கப்பட்டது