மேகவாகனன்
மேகவாகனன் (Meghavahana) காஷ்மீரின் இரண்டாவது கோனாண்டா வம்சத்தின் ஆட்சியாளரும் நிறுவனரும் ஆவார்.[2] இவர் கோனாண்டா ஆட்சியாளர்களின் 80-வது ஆட்சியாளர் ஆவார். இவரைத் தொடர்ந்து பிரவரசேனன் என்பவர் 81 வது ஆட்சியாளராக பதவிக்கு வந்தார்.
சொந்த வாழ்க்கை
தொகுமீட்டெடுக்கப்பட்ட வம்சத்தின் முதல் இளவரசரான மேகவாகனன், காந்தார மன்னனின் அவையில் நாடுகடத்தப்பட்ட யுதிஷ்டிரனின் கொள்ளுப் பேரனான கோபாதித்யாவின் மகன் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் மந்திரிகளின் அழைப்பின் பேரில் தனது முன்னோர்களின் சிம்மாசனத்தைக் கைப்பற்கனன், வலிமையானவராகவும் அதே சமயம் பக்திமிக்கவராகவும் விவரிக்கப்படுகிறார். இவர் காமரூப மன்னன் பால வர்மனின் மகள் அமிர்தபிரபாவை மணந்தார். இவரது மனைவி காஷ்மீரை நிறுவியதாகத் தெரிகிறது.
பதவிக்காலம்
தொகுபலிகளில் கூட விலங்குகளைக் கொல்வதைத் தடைசெய்தது, ஏராளமான புத்த விகாரைகளைக் கட்டுவது போன்றவை இவரை பௌத்தப் புரவலராகக் காட்டுகின்றன. இவர் திக்விஜயம் செய்து உலகைக் காப்பற்றினார் என்று இராஜதரங்கிணியில் அதன் ஆசிரியர் கல்கணர் விவரிக்கிறார். மேகவாகனன் முழு பூமியிலும் படுகொலைகளைத் தடுக்கும் பொருட்டு அதை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. பழைய தலைநகரான பூரணாதிஸ்தானத்தில் பல்வேறு புனிதமான கட்டிடங்களைக் கட்டினார்.[3]
இதனையும் பார்க்கவும்
தொகுசன்றுகள்
தொகு- ↑ Cribb, Joe. "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly" (in en). Numismatic Digest volume 40 (2016). https://www.academia.edu/32663187/Early_Medieval_Kashmir_Coinage_A_New_Hoard_and_An_Anomaly.
- ↑ Bakshi, S.R. (1997). Kashmir: history and people. p. 60.
- ↑ Kalhana. Rajatarangini.
மேலும் படிக்க
தொகு- Bakshi, S.R. (1997). Kashmir: history and people. pp. 227.
- Bamzai, P. N. K. (1994). Culture and political history of Kashmir: Volume 1. Indian Institute of Advanced Study. p. 882.