மேம்பாலம் என்பது. ஒரு சாலையையோ, தொடர்வண்டிப் பாதையையோ அதன் மேலாகக் குறுக்காகக் கடந்து செல்லும் இன்னொரு சாலை அல்லது தொடர்வண்டிப் பாதையைக் கொண்ட பாலம் போன்ற ஒரு அமைப்பைக் குறிக்கும். முக்கியமான பெரிய சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் செல்வதற்காகவே மேம்பாலங்களை அமைப்பது வழக்கம். இது, முக்கியமான சாலைகளில் செல்லும் வண்டிகள் குறுக்கே செல்லும் சாலைகளில் செல்லும் வண்டிகளுக்கு வழி விடுவதற்காக நிறுத்திச் செல்லவேண்டிய தேவையை இல்லாமல் ஆக்குகிறது. வண்டிப் போக்குவரத்துக்கான சாலைகளைத் தவிர நடையர்கள் (நடை பயணிகள்) சாலைகளைக் கடந்து செல்வதற்குச் சாலைகளுக்கு மேலாக அமைக்கப்படும் பாலங்களையும் மேம்பாலங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எல்லா வேளைகளிலும் இவ்வாறான கடவைகள் மேம்பாலங்களாகவே அமைவதில்லை. சில சமயங்களில் ஒரு சாலை நிலமட்டத்திலும் மற்றச்சாலை நில மட்டத்துக்குக் கீழாக அதனைக் கடப்பதும் உண்டு.[1][2]

சாலைகள் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் இடங்களில் மட்டுமே மேம்பாலங்கள் அமையும் என்பதில்லை. இரண்டு சாலைகள் ஒரே சாலையாக இணையும் இடங்களிலும், இரண்டு சாலைகள் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும்போது ஒரு சாலையிலிருந்து மற்றச் சாலைக்கு இணைப்புத் தேவைப்படும்போதும் மேம்பாலங்கள் அமைக்கப்படுவது உண்டு.

மேற்கோள்கள்

தொகு
  1. Henry K. Evans (1950). "Read the ebook Traffic engineering handbook by Institute of Traffic Engineers". ENGINEERING HANDBOOK, Second Edition 1950. New Haven, Connecticut: Institute of Traffic Engineers. Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2010-10-09 – via eBooksRead.com. Search for [Separation, Grade].
  2. Turner, J.T. Howard (1977). The London Brighton and South Coast Railway 1. Origins and formation. London: Batsford. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7134-0275-9 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேம்பாலம்&oldid=4102345" இலிருந்து மீள்விக்கப்பட்டது