மேரி மக்கிலொப்

மேரி மக்கிலொப் (Mary MacKillop, அல்லது சிலுவையின் புனித மேரி சனவரி 15, 1842 - ஆகத்து 8, 1909) என்பவர் ஆத்திரேலிய கத்தோலிக்க அருட்சகோதரியும் புனிதரும் ஆவார். இவர் அரு. ஜூலியன் டெனிசன் வூட்ஸ் என்பவருடன் இணைந்து திரு இருதயத்தின் புனித யோசேப்புவின் சகோதரிகள் என்ற துறவறசபையினை நிறுவினார். இச்சபையின் மூலம் பல கத்தோலிக்கப் பள்ளிகள், நலன்புரி அமைப்புகளை வறிய மக்களுக்கான கல்வி மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு ஆஸ்திரலேசியா எங்கணும் தோற்றுவித்தார். ஆத்திரேலியாவில் புனிதர் பட்டம் பெற்ற முதல் நபர் மேரி மக்கிலொப் ஆவார்.

சிலுவையின் புனித மேரி
Saint Mary of the Cross
மேரி மக்கிலொப், 1869
பிறப்புசனவரி 15, 1842(1842-01-15)
ஃபிட்ஸ்ரோய், விக்டோரியா, ஆத்திரேலியா
இறப்பு8 ஆகத்து 1909(1909-08-08) (அகவை 67)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கத் திருச்சபை
அருளாளர் பட்டம்19 சனவரி 1995, சிட்னி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்17 அக்டோபர் 2010, வத்திக்கான் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்மேரி மக்கிலொப் இடம், வடக்கு சிட்னி
திருவிழா8 ஆகத்து
பாதுகாவல்ஆத்திரேலியா, பிறிஸ்பேன்

உலக இளையோர் நாள் 2008இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2008 சூலை 17 அன்று சிட்னிக்குப் பயணம் மேற்கொண்டபோது மேரி மக்கிலொப்பின் கல்லறைக்கு சென்று செபித்தார். மேரி மக்கிலொப்ப்பின் பரிந்துரையால் நடந்தது என நம்பப்படும் இரண்டாம் அதிசயத்தினை 2009 டிசம்பர் 19 இல் திருத்தந்தை அங்கீகரித்தார்[1]. இதனையடுத்து 2010, அக்டோபர் 17 ஆம் நாள் வத்திக்கான் நகரில் திருத்தந்தையினால் புனிதராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்[2][3][4][5].

மேற்கோள்கள் தொகு

  1. MacKillop has become Australia's first saint, ஏபிசி செய்திகள், 20 டிசம்பர் 2009 {{citation}}: Check date values in: |date= (help)
  2. "Australia's first saint canonised". ஆத்திரேலியா டைம்ஸ். 17 அக்டோபர் 2010. http://www.australia-times.com.au/national/article.php?id=19285. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2010. 
  3. "Canonisation for Mary MacKillop underway". சிட்னி மோர்னிங் ஹெரால்ட். 17 அக்டோபர் 2010. http://news.smh.com.au/breaking-news-national/canonisation-for-mary-mackillop-underway-20101017-16oxs.html. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2010. 
  4. Consistory for the vote on Cause of canonisation, 19.02.2010, வத்திக்கான், 19 பெப்ரவரி 2010, retrieved 20 February 2010[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Date set for MacKillop's sainthood". ஏபிசி செய்திகள் (ஏபிசி). 19 பெப்ரவரி 2010. http://www.abc.net.au/news/stories/2010/02/19/2825313.htm. பார்த்த நாள்: 19 பெப்ரவரி 2010. 
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_மக்கிலொப்&oldid=3296108" இருந்து மீள்விக்கப்பட்டது