மேரி லூயீஸ் பார்க்கர்

மேரி லூயீஸ் பார்க்கர் (Mary Louise Parker, பிறப்பு: ஆகஸ்ட் 2, 1964) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். வீட்ஸ் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித்தொடரில் நான்சி போட்வின் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடரின் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். ரெட், ரெட் 2, ஃபிரைட் கிரீன் டொமட்டோஸ், பாய்ஸ் ஆன் த ஸைட், த வெஸ்ட் விங், ஏஞ்சல்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்ற தொடர்களில் தோன்றியுள்ளார். ஏஞ்சல்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடரில் நடித்தமைக்காக 2003 ஆம் ஆண்டின் சிறந்த துணைநடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் எம்மி[1] விருதையும் வென்றார்.

மேரி லூயீஸ் பார்க்கர்
Mary-Louise Parker by Gage Skidmore.jpg
பிறப்புஆகத்து 2, 1964 (1964-08-02) (அகவை 56)
தென் கரொலைனா
அமெரிக்கா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1988–இன்று வரை
துணைவர்பில்லி கிரூடுப் (1996–2003)
ஜெப்ரி டீன் மோர்கன் (2006–2008)
பிள்ளைகள்2

தனிவாழ்வுதொகு

  • செப்டம்பர் 2007 ல் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து கேரலின் அபெராஷ் பார்க்கர் என்ற பெயரிட்டு வளர்த்துவருகின்றார்.[2][3]
  • உகாண்டா நாட்டின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவப்பணியாற்றும் ஹோப் நார்த் என்ற நிறுவனத்தால் மேரி லூயீஸ் பார்க்கர் 2013 ஆம் ஆண்டு பெருமைப்படுத்தப்பட்டார்.[4]

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு