மேற்கு பரசேரி
மேற்கு பரசேரி (அ) பரசேரி மேற்கு எனும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் தாலுகாவில் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராகும். நுள்ளிவிளை, பரசேரி, கொன்னகுழிவிளை, மூலச்சன்விளை ஆகியவை இதன் அருகாமை கிராமங்களாகும். சுமார் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. சுடலைமாடசாமி கோவில் பரசேரி சந்திப்பில் அமைந்துள்ளது. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 9.3 கிமீ, நாகர்கோவில் தொடருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்சந்தை செல்லும் வழியில் தோட்டியோடை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.
மேற்கு பரசேரி | |||||||
— ஊர் — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||||
சட்டமன்றத் தொகுதி | குளச்சல் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 300 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
ஊர் பெயர்க் காரணம்
தொகுபரசேரியில் அமைந்துள்ள குளத்தின் பெயர் பரவன் குளம். இங்கு பரவர்கள் வாழ்ந்ததாக பல ஆதாரங்கள் உள்ளது. இவர்களுடைய இனப்பெயர் அடிப்படையிலேயே 'பரசேரி' என்று ஊரின் பெயர் உருவானது. இத்தகவல் கன்னியாகுமரி ஊர்களின் பெயர்கள் ஆய்வறிக்கை மற்றும் பரவர் வரலாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரசேரி கிராமம் நெல்விவசாயம் மிகுந்த ஒரு சிற்றூர். இங்கு வாழ்ந்த சாம்பவர் இன மக்கள் தங்களுக்கான தனி ஊரை, பரசேரி ஊரின் மேற்கு பகுதியில் அமைத்தார்கள். பரசேரிக்கு மேற்கு பகுதியில் அமைந்தமையால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும், இது மேல பரசேரி, மேட்டு குடியிருப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
ஊர் வரலாறு
தொகு1940-50 ஆண்டுகளில் கூறப்பட்ட கதைப்படி, ஒன்பது சாம்பவ நிலக்கிழார்கள் இணைந்து 180 சென்டில் இக்கிராமத்தை உருவாக்கினர். அவர்கள் விபரம் பின்வருமாறு: 1) இசக்கி மாடன் 2) மல்லங்கோட்டு சாமி 3) ஆறுமுகம் தகப்பன் இசக்கி மாடன் வகையறா 4) தாணுமாலையன் 5) இசக்கி 6) நாராயணன் 7) சுப்பிரமணியன் 8) பரமேஸ்வரன் 9) அந்திரேயா என்பவரின் கணவர்
பின்னர் காலப்போக்கில் இவர்களின் சந்ததிகளுடன், தலக்குளம் மற்றும் குவரக்குழி குடும்பங்கள் ஒன்றிணைந்து மேற்கு பரசேரி என்ற சிற்றூராக உருவானது.
இனம் & சமயம்
தொகுஇங்கு வாழும் மக்கள் அனைவரும் இந்து சாம்பவர் சமூகத்தை சார்ந்தவர்கள்.
வழிபாட்டு தலம்
தொகுஅருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோவில் ஊர்க்கோவிலாக அமைந்துள்ளது. பிரம்ம சக்தி, சாஸ்தா, முண்டன் சாமிகளும் உள்ளன. இக்கோவிலில் மல்லன் கருங்காளி காவல் தெய்வமாக அமைந்துள்ளது.
மக்கள்தொகை
தொகுஇவ்வூரில் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. இவ்வூர் 300 பேரைக் கொண்ட மக்கள்தொகை உடையது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.