மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்
மேலரகம் சுப்பிரமணிய தேசிகர், தற்போதைய தென்காசி மாவட்டத்தின் மேலகரம் எனும் ஊரில் பிறந்தவர்.இவர் திருவாவடுதுறை ஆதீனத்தின் 16-வது குரு மகா சந்நிதானமாக 1869 முதல் 1888-ஆம் ஆண்டு முடிய, மகாசமாதி அடையும் வரை இருந்தவர்.[1]சுப்பிரமணிய தேசிகரின் இளவல் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான திருக்குற்றாலக் குறவஞ்சியை பாடிய திரிகூடராசப்பர் ஆவார்.
சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருவாடுதுறை ஆதினத்தின் வித்துவான் ஆக இருந்தார். மேலும் தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ. வே. சாமிநாதையருக்கு ஆதீனத்தில் அடைக்கலம் கொடுத்து, மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் கற்க உறுதுணையாக இருந்தவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவிற்குப் பின் உ. வே. சாமிநாதையருக்கு சுப்பிரமணிய தேசிகரே தமிழ் கற்றுக் கொடுத்தார்.உ. வே. சாமிநாதய்யர் இயற்றிய என் சரித்திரம் எனும் தன் வரலாறு நூலில் சுப்பிரமணிய தேசிகரின் நற்குணங்களை குறித்துள்ளார்.[2] [3]