மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம்

(மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவை புகலிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ளது மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம். இது 1998-ஆம் ஆண்டு புகலிடமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய புகலிடம் இதுவே; இதன் மொத்தப் பரப்பளவு 593.08 ஹெக்டேர் ஆகும்.[1]

எங்கு உள்ளது? தொகு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுக்காவில் மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் கிராமக்குளங்கள்தாம் இந்த பறவை புகலிடமாக விளங்குகின்றன; இது 9 0 13 வடக்கு, 78 0 32.30 கிழக்கு நிலக்குறுக்குக்கோட்டில் அமைந்துள்ளது. இவ்விடம் மதுரையிலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் இராமநாதபுரத்திலிருந்து 47 கி.மீ., முதுகுளத்தூரிலிருந்து 27 கி.மீ., சாயல்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தாவரவளம் தொகு

வன்னி மரத்தோப்பு (Prosopis thickets) நிறைந்தது இப்பகுதி; குளங்களில் காணப்படும் கருவேல மரங்கள் ( Acacia nilotica )கூடு கட்ட ஏற்றதாக உள்ளன.

மாவளம் தொகு

கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், பலவகை கொக்குகள் ஆகிய புள்ளினங்கள் இங்கு கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு வனத்துறை". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-26.

வெளியிணைப்புகள் தொகு

தொடர்புக்கு தொகு

Wild life warden, Gulf of Mannar biosphere reserve, Mandapam, Ramanathapuram. Phone:04567-230079