மேல்பாக்கம்
மேல்பாக்கம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள ஈகுவார்பளையம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும்.[1]
மேல்பாக்கம் | |
---|---|
கிராமம் | |
மேல்பாக்கம், திருவள்ளூர், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 13°24′24″N 80°07′26″E / 13.40665°N 80.12380°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 250 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 601201 |
வாகனப் பதிவு | TN-20 |
1950-களில் ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில், தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட அரசுக்குச் சொந்தமான பிச்சைக்காரர்களுக்கான ஒரே மறுவாழ்வு மையமாக இது அறியப்படுகிறது.[1][2]
அரசியல்
தொகுமேல்பாக்கம் பகுதியானது, கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
பொருளாதாரம்
தொகுமேல்பாக்கத்திற்கு அருகில் இரண்டு முக்கியமான தொழிற்சாலைகள் உள்ளன, டுபோன்ட் ஃபைபர்ஸ் மற்றும் ஹைடெக் கார்பன் (ஆதித்யா பிர்லா குழும நிறுவனம்) (பிர்லா கார்பன் என்றும் அழைக்கப்படுகிறது). அதைத் தொடர்ந்து, டுபோன்ட் ஃபைபர்ஸ், எஸ். ஆர். எஃப். லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஸ்ரீராம் ஃபைபர்ஸ் லிமிடெட் என்றழைக்கப்படும் எஸ். ஆர். எஃப்., நைலான் டயர் நூலிழையின் உலகின் 8 வது பெரிய உற்பத்தியாளராகும்.
போக்குவரத்து
தொகுமேல்பாக்கமானது, கும்மிடிப்பூண்டியிலிருந்து மாதர்பாக்கம் செல்லும் மேல்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் மேல்பாக்கம் பேருந்து நிலையம் (அல்லது) ஈகுவார்பாளையம் பேருந்து நிலையம்.
அருகிலுள்ள இரயில் நிலையம் - கும்மிடிப்பூண்டி.
அருகிலுள்ள சமூகங்கள்
தொகுகும்மிடிப்பூண்டி - 6 கி.மீ. (சாலை)
மாதர்பாக்கம் - 4 கி.மீ. (சாலை)
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Raju, Nidharshana (2022-12-15). "TN launches scheme to rehabilitate beggars, but has no govt-run accommodation". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2023-09-15.
- ↑ Shekhar, Laasya (2018-08-16). "Government spends Rs 1.5 lakh every month for empty beggar rehabilitation home". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-09-15.