மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்
மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள் (Upper Atmosphere Research Satellite, UARS) என்பது பூமியின் வளிமண்டலத்தை, குறிப்பாக ஓசோன் படலத்தை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனத்தினால் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். 5,900-கிலோகிராம் (13,000-இறா) எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள் 1991 ஆம் ஆண்டு செப்டம்பரில் டிஸ்கவரி விண்ணோடம் மூலம் பூமியின் சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது 1991 செப்டம்பர் 15 ஆம் நாள் சுற்றுப்பாதைக்கு சென்றது.
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | புவி அவதானிப்பு |
செயற்கைக்கோள் | பூமி |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | 1991-09-15 |
ஏவிய விறிசு | டிஸ்கவரி விண்ணோடம் |
ஏவு தளம் | புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
திட்டக் காலம் | 14 ஆண்டுகள், 91 நாட்கள் |
தே.வி.அ.த.மை எண் | 1991-063B |
இணைய தளம் | http://umpgal.gsfc.nasa.gov/ |
நிறை | 5,900 kg (13,000 lb) |
திறன் | 1600.0 W |
Batteries | 3 x 50 ஆம்பியர்-மணி மின்கலங்கள் |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
அரைப் பேரச்சு | 600 கிமீ |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | 0° |
சேய்மைநிலை | 575.0 கிமீ |
அண்மைநிலை | 574.0 கிமீ |
சுற்றுக்காலம் | 95.9 நிமி. |
மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படக்கூடியதாக அனுப்பப்பட்ட இச்செயற்கைக்கோள் 2005 சூன் மாதத்தில் அதில் இணைக்கப்பட்ட 10 கருவிகளில் ஆறு கருவிகள் இயங்கும் நிலையில் காணப்பட்டன. ஆனாலும், 2005 திசம்பரில் செயலிழக்கச் செய்யப்பட்டது. இறுதியில் 2011 செப்டம்பர் 23 இரவு 11:23 மணிக்கும் செப்டம்பர் 24 காலை 01:09 மணிக்கும் இடையில் பூமியில் வீழ்ந்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடனே அது முழுமையாக எரிந்து விட்டது. ஆனாலும் அதன் எரியாத கிட்டத்தட்ட 500 கிலோகிராம் பகுதிகள் பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கரைக்கப்பால் வீழ்ந்ததாக நாசா அறிவித்தது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ UARS Updats, நாசா, செப்டம்பர் 24, 2011
வெளி இணைப்புகள்
தொகு