இராஜஸ்தானின் மேவார் பிரதேசம்
அமைவிடம் தெற்கு இராசத்தான்
19-ஆம் நூற்றாண்டு, கொடி
குகில் இராச்சியம் நிறுவப்பட்ட ஆண்டு: கிபி 734
மொழி மேவாரி
சமயம்: இந்து
அரச குலங்கள் இராசபுத்திர மோவாரிகள் (734 வரை),
குகிலோத்திகள் (734-1303)
பரிகர்கள்
சிசோதியர்கள் (1326–1949)
தலைநகரங்கள் நக்டா, சித்தோர்கர் மற்றும் உதய்ப்பூர்

மேவார் பிரதேசம் அல்லது மேவாட் (Mewar or Mewāḍ) (இந்தி: मेवाड़) இந்தியாவின் மேற்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தில் தென்கிழக்கில் அமைந்த நிலப்பரப்பாகும். மேவார் பகுதியில் பில்வாரா மாவட்டம், சித்தோர்கார் மாவட்டம், ராஜ்சமந்து மாவட்டம், உதய்பூர் மாவட்டம், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள் அடங்கியுள்ளது. மேவார் பகுதியில் ஜவாய் ஆறு மற்றும் பனாஸ் ஆறுகள் பாய்கிறது.

மேவாரின் வரைபடம்

மேவார் பகுதி பல்லாண்டுகளாக இராசபுத்திர மன்னர்களால் தன்னாட்சியுடன் 1817 வரை ஆளப்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் மேவார் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.[1][2] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[3]

அமைவிடம்

தொகு

மேவார் பகுதியின் வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடரும், வடக்கில் அஜ்மீரும், தெற்கில் குசராத்தும், தென்கிழக்கில் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியும், கிழக்கில் இராஜஸ்தானின் ஹதோதி பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

மேவார் இராச்சியம் உதய்ப்பூர் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கி பி 530இல் நிறுவப்பட்டது. எனவே மேவாரை உதய்ப்பூர் இராச்சியம் என்றும் அழைப்பர். பின்னர் மேவாரின் தலைநகராக அமைந்த சித்தோர்கார் கோட்டையை 1568-இல் அக்பர் கைப்பற்றினார். முகலாயப் பேரரசில் மேவார் பகுதி 150 ஆண்டுகள் இருந்தன.

மேவார் பகுதிகளை இராஜபுத்திர மோரி, குகிலோத் மற்றும் சிசோதியா குல இராஜபுத்திர மன்னர்கள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். 1949இல் இந்தியப் பிரிவினைக்கு பின்னர் 1949இல் மேவார் பகுதிகள் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.[4][5] சித்தோர்கார் நகரம் சிசோதியா இராஜபுத்திர குலத்தினரின் தலைநகராக விளங்கியது.

மகாராணா
ராணா கும்பா[6]
ராணா சங்கா
மகாராணா பிரதாப் [7]

பொருளாதாரம்

தொகு

மேவார் பகுதியின் பொருளாதாரம் சுற்றுலாத் துறை, கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள், நிலக்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் கல் தொழிற்சாலைகளையே நம்பியுள்ளது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. WorldStatesmen – India Princely States K-Z
  2. http://www.thefreedictionary.com/Princely+state
  3. Princely States of India
  4. Princely States of India
  5. "Udaipur State (also called Mewar): History". தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா. 1909. pp. v. 24, p. 87.
  6. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  7. John Merci, Kim Smith; James Leuck (1922). "Muslim conquest and the Rajputs". The Medieval History of India pg 67-115
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவார்&oldid=3882860" இலிருந்து மீள்விக்கப்பட்டது