மைக்கோபாக்டீரியம் இலெப்ரே

(மைக்கோபேக்டீரியம் இலெப்ரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மைக்கோபாக்டீரியம் இலெப்ரே
Mycobacterium leprae
Microphotograph of Mycobacterium leprae, the small brick-red rods in clusters, taken from a skin lesion. Source: CDC
உயிரியல் வகைப்பாடு
திணை: பாக்டீரியா
தொகுதி: ஆக்டினோபாக்டீரியா
வரிசை: Actinomycetales
துணைவரிசை: Corynebacterineae
குடும்பம்: மைக்கோபாக்டீரியேசியே
பேரினம்: மைக்கோபாக்டீரியம்
இனம்: M. leprae
இருசொற் பெயரீடு
`மைக்கோபாக்டீரியம் இலெப்ரே`
Mycobacterium leprae

Hansen, 1874

மைக்கோபாக்டீரியம் இலெப்ரே (Mycobacterium leprae) அல்லது ஃகான்சனின் காக்கசு இசுப்பைரில்லி (Hansen’s coccus spirilly), என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் தொழுநோயை உண்டாக்கும் பாக்டீரியம்.[1] . தொழுநோய் ஃகான்சனின் நோய் (Hansen's disease) என்றும் அறியப்படுகின்றது. இந்த நுண்ணுயிரி மாறும் அளவும், காடியால் குலையாத நிறத்தன்மையும் கொண்ட வகையானது.[2] மை.இலெப்ரே (M. leprae) நுண்ணுயிரானது உயிர்வளி தாங்கும் குச்சி வடிவ பாக்டீரியாக்கள். மைக்கோபாக்டீரியாவுக்கே உரித்தான மெழுகுபோன்ற பூச்சு கொண்டவை. அளவிலும் வடிவிலும் இவை காசநோய் (TB) நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே. தடித்த மெழுகுபோன்ற பூச்சால், மை. இலெப்ரே வழக்கமாக ஏற்கும் கிராம் சாயம் (Gram stain) ஏற்காமல் கார்பல் ஃபூக்சின் சாயம் (carbol fuchsin) ஏற்கின்றது. வளர்ப்பூடகத்தில் முதிர்ச்சி அடைய பல கிழமைகள் ஆகின்றன.

ஒளி நுண்ணோக்கிவழிக் கண்டால் மை. இலெப்ரே (M. leprae) பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்குரோமீட்டர் நீளமும் (μm), 0.2-0.5 மைக்குரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.[3]

இவ் நுண்ணுயிரியை நோர்வே மருத்துவர் கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன் (Gerhard Armauer Hansen) 1873 இ கண்டுபிடித்தார், இவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் தேடிக்கொண்டிருந்தார். மாந்தர்களில் தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான்[4][5][மெய்யறிதல் தேவை] இந்த நுண்ணுயிரியை செய்களச் சாலையில் செயற்கையான வளர்ப்பூடகத்தில் ஒருபொழுதும் வளர்க்க முடிந்ததில்லை[2]. ஆனால் எலியின் கால் பாதத்திலும், அண்மையில் ஒன்பது-பட்டை நல்லங்கு (அர்மடில்லோ) என்னும் விலங்கிலும் வளர்க்க முடிந்தது, ஏனெனில் மாந்தர்கள் போலவே இவையும் தொழுநோய்க்கு உள்ளாகும். இந்த நுண்ணுயிரியை வளர்ப்பூடகத்தில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந் நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.

மைக்கோபாக்டீரியாவுக்கேயான தனித்தன்மை வாய்ந்த இவற்றின் உயிரணுக்களை மூடியிருக்கும் படலத்தில் காணப்படும் மைக்கோலிக்குக் காடியால் (mycolic acid) இவற்றின் மேற்புறம் மெழுகுபோன்ற பூச்சு கொண்டிருக்கும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ). McGraw Hill. பக். 451–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8385-8529-9. https://archive.org/details/sherrismedicalmi0000unse_q1i3. 
  2. 2.0 2.1 McMurray DN (1996). "Mycobacteria and Nocardia.". in Baron S. et al., eds.. Baron's Medical Microbiology (4th ). University of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9631172-1-1. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.1833. 
  3. Thomas Shinnick, The Prokaryotes பரணிடப்பட்டது 2019-09-12 at the வந்தவழி இயந்திரம் 2006, PART B, 1, 934-944, எஆசு:10.1007/0-387-30743-5_35
  4. Hansen GHA (1874). "Undersøgelser Angående Spedalskhedens Årsager (Investigations concerning the etiology of leprosy)" (in Norwegian). Norsk Mag. Laegervidenskaben 4: 1–88. 
  5. Irgens L (2002). "The discovery of the leprosy bacillus". Tidsskr nor Laegeforen 122 (7): 708–9. பப்மெட்:11998735.