மைக்ரோசாப்ட்டின் வரலாறு

விக்கீமீடிய வரலாற்றுக் கட்டுரைகள்

மைக்ரோசாப்ட் ஒரு பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தொடக்க வரலாறு 1975 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியிலிருந்து குறிப்பிடலாம். இந்நிறுவனத்தின் ஆரம்பம் ஆல்புகெர்க்கிவில் பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் மூலம் நிறுவப்பட்டது. [1] அதன் தற்போதைய சிறந்த விற்பனைத் தயாரிப்புகளாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம், மைக்ரோசாப்ட் ஆபீஸ் உற்பத்தி மென்பொருள் தொகுப்பு, எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுகள், பிங், தேடல் பொறி ஆகியவற்றை குறிப்பிடலாம். மைக்ரோசாப்ட் என்ற வார்த்தை மைக்ரோகம்ப்யூட்டர் மற்றும் மென்பொருள் ஆகிய வார்த்தைகளின் இணைப்பு சொல்லாகும்.

ஆகத்து 23 2012 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சின்னம்

1980களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்துடன் தனது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தினை ஐபிஎம் நிறுவனத்தின் வன்பொருளோடு தர ஓப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஓப்பந்த்தின்படி ஐபிஎம் நிறுவனம் தனது ஓவ்வோரு கணிணி விற்பனைக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உரிமைக்கான பங்கினை தந்தது. 1985 ஆம் ஆண்டில், ஐபிஎம் OS / 2 எனப்படும் தங்களது கணினிகளுக்காக ஒரு புதிய இயங்குதளம் எழுத வேண்டும் என்று மைக்ரோசாப்டிடம் கோரியது. இதனை ஏற்று OS/2க்கான இயங்குதளத்தினை தயாரிக்கும் வேளையில் தனது இயங்குதளத்தினையும் விற்று OS/2 இயங்குதளத்திற்கு போட்டியை உருவாக்கியது. ஓரு காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளம் OS/2 இயங்குதளத்தின் விற்பனையை முந்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 1990களில் மைக்ரோசாப்ட் விண்டோஸின் பல பதிப்புகள் தொடங்கப்பட்ட போது, உலகின் தனிநபர் கணினிகளின் 90% பங்கினை கைப்பற்றியது.

சூன் 30, 2014 வரையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் $ 86.83 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயும் மற்றும் 128,076 ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக உள்ளது. [2]

1975-1985: மைக்ரோசாப்ட் நிறுவப்படுதல் தொகு

 
மைக்ரோசாப்ட் ஊழியர்கள், அல்பெர்க்யூ, டிசம்பர் 7, 1978
மேலே: ஸ்டீவ் வூட், பாப் வேலெஸ், ஜிம் லேன்
நடுவில்: பாப் ஓ ரியர், பாப் கிரின்பெர்க், மார்க் மெக் டோனால்டு, கோர்டன் லெட்வின்
கீழே: பில் கேட்ஸ், ஆனட்ரியா லூவிஸ், மார்லா வூட், பால் ஆலன்
படத்தில் இல்லாதவர்கள்: ரிக் வைலேன்ட், மிரியம் லுபோவ்[3]

Gates described this photo in 2009 as "that famous picture that provides indisputable proof that your average computer geek from the late 1970s was not exactly on the cutting edge of fashion."[4]

பால் ஆலன் 1975 ஆம் ஆண்டு சனவரி மாத பாப்புலர் எலக்டரானிக்‌ஸ் என்ற நாளிதழில் வெளியான ஆல்டேர் 8000 நிரூபணம் பற்றிய செய்தியினை பில் கேட்ஸுடன் பகிர்ந்ததே மைக்ரோசாப்ட் நிறுவனம் உதிக்க காரணமாக இருந்தது. [5] ஆலன் மற்றும் கேட்ஸு பேசிக் என்ற நிரலாக்க மொழியினை அதில் செயல்படுத்த முடியம் என்ற வாய்ப்பினை உணர்ந்தனர்.[6] பில் கேட்ஸ் அவர்களுடைய செயாலாக்கத்தினை செயல் விளக்கமளிப்பதற்காக புது மைக்ரோகணிணியின் தயாரிப்பாளர்களான மைக்ரோ இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் டேலிமேட்ரி சிஸ்டம்ஸ் நிறுவனத்தை அழைத்தார். இந்த அழைப்பின் நோக்கம் புது விற்பனை ஆணை அல்லது ஓப்பந்தத்தைப் பெறுவதற்காக இருந்தது. செயல் விளக்கமளிப்பதற்கு 8 வாரத்திற்கு முன்பு வரை அவர்களிடம் ஆல்டேர் கணிணியோ அல்லது மொழிபெயர்ப்பியோ அவர்களிடம் இல்லை இருந்தாலும் அவர்கள் மொழிபெயர்ப்பியை (இன்டர்பெரட்டர்) தயாரித்தனர். ஆலன் நீயு மெக்ஸிக்கோவில் உள்ள அல்பெர்க்யூ நகரில் உள்ள மைக்ரோ இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் டேலிமேட்ரி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியை செயல் விளக்கமளித்தார் அதில் உடன்பட்ட அவர்கள் ஆல்டேர் கணிணியுடன் பேசிக் இன்டர்பெரட்டரையும் அளிக்க ஓப்புக்கொண்டனர்.[7] அதன் பின்னர் ஆலன் மற்றும் கேட்ஸ் பாஸ்டன் விட்டு சென்றனர். அல்பெர்க்யூவில் மைக்ரோ இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் டேலிமேட்ரி சிஸ்டம்ஸ் இருந்த காரணத்தினால் அங்கு ஆலன் ஹனிவெல் நிறுவனத்தில் வேலை பார்க்க தொடங்கினார். கேட்ஸ் அங்கேயே ஹார்வர்டில்,[8] சேர்ந்து படித்தார். இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில் ஹார்வர்டிலிருந்து வெளியேறி அங்கே ஆலனுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை இணை நிறுவனர். நிறுவனத்தின் நிகர வருமானம் 1976 இறுதிக்குள் $16,005 ஆக இருந்தது. [9]

ஆலன் மைக்ரோ-சாப்ட் என்ற அசல் வார்த்தையை மைக்ரோ மற்றும் மென்பொருள் என்பதின் இணைப்பாக உருவாக்கினார்.[10]எளிமையான தொடக்க காலங்களில் நவம்பர் 26ம் தேதி, 1976 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நியூ மெக்ஸிக்கோ அரசின் செயலர் மூலம் பதிவு செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட்டின் முதல் சர்வதேச அலுவலகம் சப்பான் நாட்டில் 'ஆஸ்கி மைக்ரோசாப்ட்' என்ற பெயருடன் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி உருவானது. (தற்போது இது மைக்ரோசாப்ட் சப்பான் என்றழைக்கப்படுகிறது). நவம்பர் மாதம் 29ஆம் தேதி 1979ஆம் ஆண்டு பில் கேட்ஸ் 'மைக்ரோசாப்ட்' என்ற சொல்லை பயன்படுத்தினார்.[5] அல்பெர்க்யூவில் திறமையான முதல் தரமான நிராலாளர்களை கண்டுபிடித்து நியமிப்பதில் சிரமம் எற்பட்டதால் அல்பெர்க்யூவில் உள்ள அலுவலகத்தினை வாஷிங்டனில் உள்ள பெல்வூயூ என்ற இடத்திற்கு மாற்றினர். மாற்றத்திற்கு சிறிது காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் வலது புறத்தில்.

ஸ்டீவ் பால்மர், 1980 ஜூன் 11 ம் தேதி இந்நிறுவணத்தில் சேர்ந்தார். இவர் பின்னாளில் பில் கேட்ஸ்க்கு பிறகு தலைமை நிர்வாக அதிகாரியாக 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி 2014 வரை பதவி வகித்தார்.[5] சூன் 25, 1981 அன்று இந்த நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு 'மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், இன்க்' என்று பெயர் மாற்றம் பெற்று வாஷிங்டனில் தனது சேவையை தொடர்ந்தது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பில் கேட்ஸ் நிறுவனம் மற்றும் குழுவின் தலைவர் தலைவரானார் மற்றும் பால் ஆலன் செயல் துணைத் தலைவர் ஆனார்.[5]

1970களில் பிரபலமாக இருந்த பேசிக் நிரல்மொழியின் வெவ்வேறு வடிவங்களே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விற்பனைக்குறியவையாக இருந்தன.கொமடோர் 64, ஐபிஎம் பிசி மற்றும் ஆப்பிள் II கணிணிகளில் முறையே ஆப்பிள்சாப்ட் பேசிக், ஐபிஎம் கேசட்பேசிக் மற்றும் கொமடோர் பேசிக் என்று நிரல் மொழிகளை வெளியிட்டனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் வன்பொருள் Z-80 சாப்ட்கார்டு ஆகும்[11]. இது ஆப்பிள் II கணிணியின் சிபி/எம்ஐ இயக்க உதவியாக இருந்தது. அந்த சமயத்தில் வணிக மென்பொருட்களை இயக்கவும், உயர்நிலை மொழிகளுக்கான இன்டர்பிரட்டர் மற்றும கம்பைலர்களை பயன்படுத்துவதற்கான தொழில் தரமான இயங்குதளமாக சிபி/எம் விளங்கியது. சாப்ட்கார்டு முதன் முதலில் மார்ச் 1980ல் வெஸ்ட் கோஸ்ட் கம்ப்யூட்டர் பேரில் பொதுமக்கள் முன்னிலையில் செயல்படுத்திக் காட்டப்பட்டது.[12][13]இது ஒரு உடனடி வெற்றியை பெற்றது; அந்த நேரத்தில் மைக்ரோகம்ப்யூட்டர் சந்தையில் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையில் 5,000 கார்டுகள் ஆரம்ப மூன்று மாதங்களில் வாங்கப்பட்டன. ஒவ்வொரு கார்டும் $349 விலையை கொண்டது. 1980களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல்தர வருவாய் ஆதாரமாக இது இருந்தது. [14]

முதன் முதலில் நிறுவனத்தினால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆகஸ்ட் 25, 1980ல் வெளியிடப்பட்ட இயங்குதளம் யூனிகஸ் வகையை சேர்ந்ததாக இருந்தது. இந்த இயங்குதளத்தை ஒரு விநியோக உரிமம் மூலம் ஏடி அன்டு டியிடமிருந்து வாங்கியது. இதற்கு எக்ஸினிக்ஸ் என்று பெயரிட்டு சாண்டா குரூஸ் ஆபரேஷன் என்ற நிறுவனத்தினை அமர்த்தி / பல தளங்களில் இயங்குவதற்கு ஏற்ப மாற்றபட்டது. [15][16] இந்த லினக்ஸூ வகையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் சொற்செயலியான மைக்ரோசாப்ட் வேர்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 'மல்டி டூல் வேர்டு' என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்தது மைக்ரோசாப்ட் வேர்டு. மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பு என்ன பார்கின்றோமோ அதை கிடைக்க செய்வதில்(WYSIWYG- விஸ்விக்) புகழ் பெற்று விளங்கியது.

1983ல் இளவேனில் காலத்தில் மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பு வெளியிடப்பட்டது. இத்தொகுப்பின் இலவச பிரதி பிசி வோர்ல்டு என்ற ஒரு பத்திரிகையுடன் வட்டு வடிவில் பிரசுரிக்கப்பட்டது. இதுவே உலகில் முதல் முறையாக ஒரு பத்திரிகையுடன் வட்டு இலவசமாக பிரசுரிக்கப்பட்டதாகும். [17]எனினும், எக்ஸினிக்ஸ் இயங்குதளம் நேரடியாக எனினும் இறுதிப் பயனர்களிடம் விற்பனை செய்யப்படவில்லை ஆனால் அவை ஓஇஎம் மூலம் உரிமம் விற்பனை செய்யப்பட்டன.

1985-1991: OS/2 எழுச்சி மற்றும் வீழ்ச்சி தொகு

 
மைக்ரோசாப்ட்டின் அலுவலகம் முன் இருக்கும் சின்னம். ரெட்மான்ட் மைக்ரோசாப்ட்டின் அலுவலகம் 8 மில்லியன் சதுர அடிகளையும் 28000 ஊழியர்களையும் கொண்டதாகும்.[18]

1985 ஆம் ஆண்டு அயர்லாந்து மைக்ரோசாப்ட் சர்வதேச உற்பத்தி வசதிகள் ஒரு முக்கிய இடம் பெற்றது. அங்கிருந்துதான் தனது முதல் மைக்ரோசாப்ட் வின்டோஸ் பதிப்பினை நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெளியிட்டது. இது மைக்ரோசாப்ட் டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வரைகலை நீட்டிப்பு ஆகும்.[5]


மேற்கோள்கள் தொகு

  1. "Bill Gates: A Timeline". BBC News. June 15, 2006. http://news.bbc.co.uk/2/hi/business/5085630.stm. பார்த்த நாள்: 2006-07-03. 
  2. "Microsoft 2014 Facts" (HTML). பார்க்கப்பட்ட நாள் October 22, 2014.
  3. Paul Allen (19 April 2011). Idea Man: A Memoir by the Cofounder of Microsoft. Penguin Group US. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-101-47645-1. http://books.google.com/books?id=3lFczEsFLRsC&pg=PT85. 
  4. "Bill Gates: My 1979 Memories". பார்க்கப்பட்ட நாள் November 30, 2012.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "What We'll Miss About Bill Gates – a Very Long Good-Bye". Wired. May 19, 2008. http://archive.wired.com/techbiz/people/magazine/16-06/st_billgates. பார்த்த நாள்: May 3, 2011. 
  6. "Key Events in Microsoft History". Archived from the original on அக்டோபர் 21, 2013. பார்க்கப்பட்ட நாள் June 26, 2012. (DOC format)
  7. "Microsoft Company 15 September 1975". The History of Computing Project. Archived from the original on 23 ஜூலை 2005. பார்க்கப்பட்ட நாள் August 11, 2005. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Alfred, Randy. "April 4, 1975: Bill Gates, Paul Allen Form a Little Partnership". Wired Magazine. http://www.wired.com/2011/04/0404bill-gates-paul-allen-form-microsoft/. பார்த்த நாள்: March 6, 2015. 
  9. "Iconic Albuquerque Photo Re-Created". பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
  10. Gates, Bill (October 2, 1995). "Bill Gates & Paul Allen Talk". CNN. http://money.cnn.com/magazines/fortune/fortune_archive/1995/10/02/206528/index.htm. பார்த்த நாள்: May 3, 2011. 
  11. Lock, Robert (May–June 1980). "An Apple Breakthru". Compute!: pp. 6. https://archive.org/stream/1980-05-compute-magazine/Compute_Issue_004_1980_May_Jun#page/n7/mode/2up. பார்த்த நாள்: 25 October 2013. 
  12. "Z-80 Board Puts CP/M on Apple". Infoworld (Popular Computing) 2 (6): p. 3. April 28, 1980. பன்னாட்டுத் தர தொடர் எண்:0199-6649. http://books.google.com/books?id=Wj4EAAAAMBAJ&pg=PT2. 
  13. "Seminar Spills Negotiating Secrets". Infoworld (Popular Computing) 2 (21): p. 24. November 24, 1980. பன்னாட்டுத் தர தொடர் எண்:0199-6649. http://books.google.com/books?id=mT4EAAAAMBAJ&pg=PT23. "Unsure of the demand for the product, Microsoft took a prototype to the last West Coast Computer Faire". 
  14. Ballmer, Steve. "Microsoft Surface Keynote". பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  15. Jason Levitt (June 12, 2000). "Is It Time Again For Microsoft And Unix?". Information Week இம் மூலத்தில் இருந்து 2006-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061105100939/http://www.informationweek.com/author/internet36.htm. பார்த்த நாள்: 2006-04-29. 
  16. Dafydd Neal Dyar (November 4, 2002). "Under The Hood: Part 8". Computer Source இம் மூலத்தில் இருந்து 2006-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060901182630/http://www.computersourcemag.com/articles/viewer.asp?a=695. பார்த்த நாள்: 2006-07-04. 
  17. A. Allen, Roy (October 2001). "Chapter 12: Microsoft in the 1980s". A History of the Personal Computer: The People and the Technology (1st ). Allan Publishing. பக். 12–13 இம் மூலத்தில் இருந்து 2006-07-02 அன்று. பரணிடப்பட்டது.. http://www.retrocomputing.net/info/allan/eBook12.pdf. பார்த்த நாள்: 2006-07-04. 
  18. Seattle Post-Intelligencer Staff (May 18, 2005). "Redmond council OKs Microsoft expansion". Seattle Post-Intelligencer. http://www.seattlepi.com/local/224768_microsoft18.html. பார்த்த நாள்: 2006-07-04.