மை ஆக்டோபஸ் டீச்சர்

2020 திரைப்படம்

மை ஆக்டோபஸ் டீச்சர் என்பது 2020 ஆண்டு நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிரத்யேக ஆவணப்படம் ஆகும். இதை பிப்பா எர்லிச் மற்றும் ஜேம்ஸ் ரீட் ஆகியோர் இயக்கியுள்ளனர். இது திரைப்பட படைப்பாளியான கிரேக் ஃபாஸ்டருக்கும் தென்னாப்பிரிக்க ஆழ்கடல் பகுதியில் கடற்பூண்டு செழித்த பகுதியில் காணப்பட்ட ஒரு ஆக்டோபசுடனான ஓராண்டுகால உறவையும் அதன் வாழ்வையும் ஆவணப்படுத்துகிறது. 93 வது அகாதமி விருதுகளில், இது சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்றது. [1]

மை ஆக்டோபஸ் டீச்சர்
இயக்கம்
  • பிப்பா எர்லிச்
  • ஜேம்ஸ் ரீட்
தயாரிப்புகிரேக் ஃபாஸ்டர்
கதை
  • பிப்பா எர்லிச்
  • ஜேம்ஸ் ரீட்
இசைகெவின் ஸ்மட்ஸ்
நடிப்பு
  • கிரேக் ஃபாஸ்டர்
  • டாம் ஃபாஸ்டர்
ஒளிப்பதிவுரோஜர் ஹாராக்ஸ்
படத்தொகுப்பு
  • பிப்பா எர்லிச்
  • டான் ஸ்வால்ம்
கலையகம்நெற்ஃபிளிக்சு
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுசெப்டம்பர் 4, 2020 (2020-09-04)(Millennium Docs Against Gravity)
7 செப்டம்பர் 2020 (Netflix)
ஓட்டம்85 நிமிடங்கள்
நாடுதென்னாப்பிரிக்கா
மொழிஆங்கிலம்
Common Octopus

சுருக்கம் தொகு

2010 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு அருகிலுள்ள பால்ஸ் விரிகுடாவில் ஒரு தொலைதூர இடத்தில் நீருக்கடியில் கடற்பூண்டு செழித்த கடல் பகுதியில் பாஸ்டர் குதித்து உள்நீச்சல் அடிக்கத் தொடங்குவதை படம் காட்டுகிறது. [2] [3] இந்த இடம் கேப் மூவலந்தீவில் சைமன் டவுனுக்கு அருகில் உள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலின் பெங்குலா குளிர் பெருங்கடல் நீரோட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். [4]

அவர் தனது அனுபவங்களை ஆவணப்படுத்தத் தொடங்குகிறார். காலப்போக்கில், ஒரு துடிதுடிப்பான இளம் ஆக்டோபசை சந்தித்தார், அது அவரது கவனத்தை ஈர்த்தது. ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு நாளும் அந்த பெண் ஆக்டோபசின் அசைவுகளைக் கண்காணிக்கும் விதமாக, அதைப் பார்க்க அவர் முடிவு செய்கிறார். அது அவருடன் ஒரு பிணைப்பை கொள்கிறது. அங்கு அது பாஸ்டருடன் விளையாடுகிறது. அது எப்படி தூங்குகிறது, வாழ்கிறது, சாப்பிடுகிறது என்பவற்றைப் பார்க்க அவரை அதனுடைய உலகத்திற்குள் அனுமதிக்கிறது.. படத்தில், போஸ்டர் தனது வாழ்க்கையில் ஆக்டோபசுடனான உறவின் தாக்கத்தை விவரிக்கிறார்.

போஸ்டருக்கும் ஆக்டோபசுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கமான உறவை படம் காட்டுகிறது. அவர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அதைப் பின்தொடர்கிறார். பைஜாமா சுறாவிடமிருந்து உயிர் தப்புவதற்காக போராடி தன்னை தற்காத்துக் கொள்கிறது. சுறாவின் ஒரு தாக்குதலில், ஆக்டோபசின் ஒரு கை துண்டாக அது வளரும் வரை தனது இருப்பிடத்துக்கு பின்வாங்கி செல்கிறது. அதன் ஒரு கை மெதுவாக வளர மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. பின்னர் தன்னை தாக்கவந்த சுறா தாக்குதலில் இருந்து தப்பிக்க, அந்த சுறாவின் முதுகில் தொற்றிக்கொள்வது உட்பட, உயிர்வாழ நம்பமுடியாத அளவுக்கு மேம்பட்ட திறமையைக் காட்டுகிறது. பின்னர், ஒரு ஆண் ஆக்டோபசுடன் இனச்சேர்க்கை செய்து, ஏராளமான முட்டைகளை இட்டு, குஞ்சுகள் பொரிக்கும் வரை உடல் இளைத்து பாறை இடுக்கில் காத்திருக்கிறது. பின்னர் தன் கடமை முடிந்தது என்பதுபோல் தன் முடிவுக்காக காத்திருந்து இம்முறை சுறா வரும்போது ஓடி ஒளியாமல் இயற்கைக்கு தன்னை ஒப்புவிக்கிறது. சுறா அதன் உடலை எடுத்துச் செல்கிறது.

ஆக்டோபசுடனான அவரின் உறவையும் அது வாழ்கை குறித்து அவருக்கு வழங்கிய வழிகாட்டலின் விளைவையும் பாஸ்டர் விவரிக்கிறார். [5]

நடிகர்கள் தொகு

  • கிரேக் ஃபாஸ்டர், அவராகவே
  • டாம் ஃபாஸ்டர், கிரெய்கின் மகன், அவனாகவே
  • ஆக்டோபஸ், அதுவாகவே
  • பைஜாமா சுறா, அதுவாகவே

வெளியீடு தொகு

மை ஆக்டோபஸ் டீச்சர் 2020 செப்டம்பர் 7 அன்று நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்டது. [6]

குறிப்புகள் தொகு

 

  1. 2021|Oscars.org
  2. InterNewsCast (19 September 2020). "Where was 'My Octopus Teacher' on Netflix Filmed?". Internewscast. Archived from the original on 16 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
  3. "The (K)helpful forests of South Africa". CapeNature (in ஆங்கிலம்). Archived from the original on 25 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Cape Point And The Waters Of False Bay..." Simonstown.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
  5. "'My Octopus Teacher' Stuns Audiences, Reinforces Power of Nature". EcoWatch (in ஆங்கிலம்). 24 September 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2020.
  6. "Tentacles of love: My octopus teacher, a story of an astonishing friendship". Daily Maverick. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_ஆக்டோபஸ்_டீச்சர்&oldid=3568925" இலிருந்து மீள்விக்கப்பட்டது