மை டியர் மார்த்தாண்டன்
மை டியர் மார்த்தாண்டன் 1990 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பிரதாப் போத்தன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, நடிகை குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் கமிங் டூ அமெரிக்கா என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிறந்த நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.
மை டியர் மார்த்தாண்டன் | |
---|---|
ஒலித்தட்டு அட்டைப்படம் | |
இயக்கம் | பிரதாப் போத்தன் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி சி. டி. மனோகர் |
கதை | ஆர். பி. விஸ்வம் |
திரைக்கதை | பிரதாப் போத்தன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | 24 ஆகஸ்ட் 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுமார்த்தாண்டன் அரண்மனையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் தனக்கு பிடித்தமான ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்வதற்காக சென்னை வருகிறார். அங்கு, நகரத்திற்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் "ஐடியா மணியை" (கவுண்டமணி) சந்திக்கிறார். மார்த்தாண்டனுக்கு பணத்தின் மதிப்பு தெரியாததால் "ஐடியா மணி" மார்த்தாண்டனிடம் உள்ள எல்லா பணத்தையும் ஏமாற்றி பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் பேக்கரியில் ஒரு பெண்ணை (குஷ்பூ) சந்தித்து, அவள் மேல் காதல் கொள்கிறார். தான் காதலித்த பெண்ணை கை பிடித்தாரா, பணத்தின் மதிப்பினை அறிந்து கொண்டாரா என்பதே படத்தின் இறுதிக் காட்சியாகும்.
நடிகர்கள்
தொகு- பிரபு - மார்த்தாண்டன்
- குஷ்பூ
- கவுண்டமணி - ஐடியா மணி
- எஸ். எஸ். சந்திரன்
- நிழல்கள் ரவி
- கோவை சரளா
- கமல்ஹாசன் (சிறப்புத் தோற்றம்)
- தியாகு
பாடல்கள்
தொகுஇப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஓ அழகு நிலவு" | பிறைசூடன் | மனோ | |||||||
2. | "ஆடுது பார்" | கங்கை அமரன் | இளையராஜா | |||||||
3. | "இளவட்டம் கை தட்டும்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |||||||
4. | "கல்யான மாப்பிள்ளைக்கு" | கங்கை அமரன் | எஸ். பி. சைலஜா | |||||||
5. | "மை டியர் மார்த்தாண்டன்" | கங்கை அமரன் | இளையராஜா | |||||||
6. | "ஓ மகராஜா" | கங்கை அமரன் | சசி ரேகா | |||||||
7. | "பாக்கு வெத்தல" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
8. | "சத்தம் வராமல்" | வாலி | மனோ, சித்ரா | |||||||
9. | "உட்டாலங்கடி" | கங்கை அமரன் | கங்கை அமரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "மை டியர் மார்த்தாண்டன் (1990)". http://www.raaga.com. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2014.
{{cite web}}
: External link in
(help)|publisher=