மொய்ரா தெலா தோரே

மொய்ரா ரேச்செல் புஸ்டமண்டே க்ரூசாடோ தெலே தோரே (Moira Rachelle Bustamante Cruzado Dela) (பிறப்பு: 1993 நவம்பர் 4) [1] இவர் ஒரு பிலிப்பைன்சு பாடகரும் மற்றும் பாடலாசிரியருமாவார். இமாகோவின் "சுண்டோ", மூன்ஸ்டார் 88 இன் "தோரெட்" மற்றும் கிமிக் கேண்டாக் வென்ற ஒற்றை "டிடிபோ-டிபோ" ஆகியவற்றின் அட்டைப்படங்களுக்காக இவர் புகழ் பெற்றார்.

தொழில்தொகு

மெக்டொனால்டின் "ஹூரே ஃபார் டுடே", சர்பின் "பினாலகி" மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் "சிக்னேட்சர் ஆப் லவ் " உள்ளிட்ட பெருநிறுவன விளம்ப்பரப் பாடலான ஜிங்கிள்ஸ் மற்றும் கருப்பொருள் பாடல்களில் பணிபுரியும் குரல் கலைஞராக தெலா தோரேவின் தொழில் தொடங்கியது. [1]

2013–2014: பிலிப்பைன்சின் குரல்தொகு

மொய்ரா தெலா தோரே, தி வாய்ஸ் ஆஃப் பிலிப்பைன்சின் முதல் பருவத்தில் சேர்ந்தார், [2] பேம்பூ மெனலாக்கின் "அல்லேலூயா" என்ற பாடலை வழங்கியதன் மூலம் பயிற்சியாளர் ஆலன் பினெண்டா லிண்டோவை கவர்ந்து. பின்னர், அவரது குழுவின் ஒரு பகுதியாக ஆனார். இவர் போட்டியின் முக்கியச் சுற்றுகளுக்கு முன்னேறினார். அங்கு காரா மங்லாபஸ் மற்றும் பெனிலோப் மாடங்குஹான் ஆகியோருடன் சேர்ந்து " ஒன் நைட் ஒன்லி " என்ற பாடலை பாடத் தேர்வு செய்யப்பட்டார். இறுதிச் சுற்றில் பெனிலோப் மாடங்குஹான் வென்றதால் இவர் வெளியேற்றப்பட்டார். [3]

2014: முதல் தனிப் பாடல் மற்றும் அறிமுகம்தொகு

இவர் தனது முதல் தனிப்பாடலான "லவ் மீ இன்ஸ்டீட்" என்ற இசைத்தொகுப்பினை மொய்ரா என்ற பெயரில் வெளியிட்டார்.

2016 - தற்போது: திருப்புமுனைதொகு

கேம்ப் லாக் மற்றும் லவ் யூ டு தி ஸ்டார்ஸ் அண்ட் பேக் ஆகிய காதல் படங்களின் அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவுகளுக்காக தெலா தோரே தனிப்பாடலைப் பாடினார்.

2017 அக்டோபரில், குய்சன் நகரத்தை தளமாகக் கொண்ட பிலிப்பைன்சின் பல்லூடக பாடல் எழுதுதல் மற்றும் இசைக் காணொளி போட்டியான ஹிமிக் ஹேண்டாக்வின் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார் . "டிடிபோ-டிபோ" என்ற லிபர்டைன் அமிஸ்டோசோ பாடலின் தெலா தோரேவின் குரல் இவரை பெரும் வெற்றியாளராக்கியது. [4] அக்டோபரின் பிற்பகுதியில், இவர் "ஆல்-ஸ்டார் சண்டே ஆப்டர்நூன் பார்ட்டி" என்ற பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜம்பாயன் என்ற ஒலியியல் குழுவில் உறுப்பினரானார்.

2018 பிப்ரவரி, இவரது முதல் இசை நிகழ்ச்சி "தாக்புவான்" அதன் முதல் நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு நான்கு நாட்களில் விற்கப்பட்டது; இதை பிலிப்பைன்ஸின் ஜான் ப்ராட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். பொதுமக்களின் கோரிக்கை காரணமாக, கச்சேரிக்கு இரண்டாவது இரவு இருந்தது.  இவரது 2018 ல் வெளிவந்த முதல் தொகுப்பான மலாயா, இவரது வெற்றி தனிப்பாடல்களான "மலாயா" மற்றும் "தாக்புவான்" ஆகியவற்றைக் கொண்டிருந்தது. [5] 2018 திசம்பரில், இவர் பிலிப்பைன்சில் ஒரு சர்வதேச ஊடக சேவை வழங்கும் நிறுவனமான ஸ்பாட்ஃபையின் பட்டியலில் முதலிடம் பிடித்தக் கலைஞர் ஆனார். [6]

2019 ஆம் ஆண்டில், இவர் ஒரு திருமண பாடலை பாடினார். ஜேசன் ஹெர்னாண்டஸ் "இகாவ் அட் அகோ" மற்றும் கேனனின் சில பாடல்களையும் படினார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

தெலா தோரே ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவர் ஆவார். ஆனால் "எனது நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதை நான் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். வழிபாட்டுப் பாடல்களை எழுதுவதையும் நிகழ்த்துவதையும் இவர் ஆர்வமாகக் கருதுகிறார். [7] தெலா தோரே பாடகர் ஜேசன் மார்வின் ஹெர்னாண்டஸை 2019 ஜனவரி 14, அன்று மணந்தார். [8]

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 "Where Did Moira Dela Torre Get Inspiration for her Hit Song ‘Malaya’". Inquirer.Net (December 6, 2017).
  2. "Meet the voice behind the McDo PH jingle". ABS-CBN News (June 30, 2013).
  3. "'Little Big Shots': Boy fulfills dream of recording song with Moira dela Torre". ABS-CBN News (December 3, 2017).
  4. "'Titibo-Tibo' interpreted by Moira wins Himig Handog 2017". ABS-CBN News (November 26, 2017).
  5. "AUDIO JUNKIE: Hits from Pinoy movies, series and 'Istorya'". Manila Bulletin (January 8, 2018).
  6. Cagape, Kristhoff. "Moira dela Torre is Spotify's No. 1 Most Streamed local artist | PUSH.COM.PH: Your ultimate showbiz hub!" (en).
  7. "Moira dela Torre on writing worship songs: "It's my passion talaga"". ABS-CBN Digital Media (August 12, 2017). "As a Christian, I don't find any other way to live my life than to be guided by his Word. [...] I don't like imposing my convictions on other people."
  8. "IN PHOTOS: Moira dela Torre and Jason Marvin Hernandez's garden wedding". Rappler.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்ரா_தெலா_தோரே&oldid=2944559" இருந்து மீள்விக்கப்பட்டது