மொழி (திரைப்படம்)
மொழி (Mozhi (film)) 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
மொழி Mozhi (film) | |
---|---|
இயக்கம் | ராதாமோகன் |
தயாரிப்பு | பிரகாஷ்ராஜ் |
கதை | ராதாமோகன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | பிரித்விராஜ் ஜோதிகா பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யா எம். எசு. பாசுகர் |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
விநியோகம் | ஆஸ்கர் பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 23, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.5 கோடி |
மொத்த வருவாய் | ₹10 கோடி |
கதைச்சுருக்கம்
தொகுமெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.
கார்த்திக்கும் விசியும் இசையமைப்பாளரிடம் இசைப்பலகை வாசிப்பவர்களாக பணிபுரிகின்றனர். இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடிபுகுகின்றனர். அடுக்குமாடி செயலர் அனந்த கிருட்டிணன் திருமாணமானவர்கள் மட்டுமே இங்கு குடியிறுக்கலாமென்றும் அதனால் அவர்களை வேறு வீட்டு பார்த்து போகும் படியும் கூறுகிறார். கார்த்திக்கை மணம் செய்து கொள்ளும்படி விசி கூறுகிறார். மனதைக்கவரும் பெண்ணை மட்டுமே திருமணம் புரிவேன் என்கிறார் கார்த்தி.
சாலையில் அர்ச்சனாவின் நடத்தையால் கவரப்பட்டு அவரிடம் மனதை இழக்கிறார். அர்ச்சனா ஆட்டோவில் சென்றுவிட்டதால் அவரின் பெயரை கார்த்திக்கு அறிய முடியால் போகிறது. விசியிடம் இந்நிகழ்வை கூறும் கார்த்திக் எப்படியும் அவரை கண்டுபிடிப்பேன் என்கிறார். பின்பு அர்ச்சனாவும் அதே அடுக்கு மாடி குடியிறுப்பில் இருப்பதை அறிகிறார். அர்ச்சனாவின் பாட்டி மயக்கமடைந்த போது மருத்துமனையில் சேர்க்கிறார், அப்பொழுது தான் அர்ச்சனாவுக்கு வாய் பேசவும் கேட்கவும் இயலாது என்பதை அறிகிறார்.
அர்ச்சனாவின் குறைகளை அறிந்த விசி அர்ச்சனாவுடன் வாழ்வது சிரமாக இருக்குமென்றும் வேறு பெண்ணை திருமணம் செய்யும்படி கூறியும் கார்த்திக் அர்ச்சனாவை மணக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார். அர்ச்சனாவைப் பற்றி அவரின் தோழி சீலா மூலம் அறிகிறார்கள். கார்த்திக் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்கிறேன் என்றதை அர்ச்சனா ஏற்கவில்லை, அவரிடம் நண்பராகத் தான் பழகியதாக கூறிவிடுகிறார். சீலா கணவனை இழந்தவள். அவளை திருமணம் புரிய விசி விரும்புகிறார். அதை சீலாவும் ஏற்றுக்கொள்கிறார். சீலாவின் திருமணத்திற்கு கார்த்திக்கும் வருவாரென்பதால் அவரைப் பார்ப்பதை தவிர்க்க திருமணத்திற்கு முன்பே திருமண பரிசை சீலாவிடம் கொடுக்க அர்ச்சனா முயல்கிறார், அதை ஏற்க மறுத்த சீலா திருமண பரிசை திருமணத்திற்கு வந்து கொடுத்தால் தான் வாங்குவேன் என்று கூறிவிடுகிறார்.
சீலாவின் திருமணத்திற்கு அர்ச்சனா வந்தாரா? கார்த்திக்குடன் இணைந்தாரா என்பது தான் முடிவு.
நடிகர்கள்
தொகு- பிரித்விராஜ் - கார்த்திக்
- பிரகாஷ்ராஜ் - விஜயகுமார் (விஜி)
- ஜோதிகா - அர்ச்சனா
- சொர்ணமால்யா - ஏஞ்சலின் சீலா
- வத்சலா ராஜகோபால் - அர்ச்சனாவின் பாட்டி
- பிரம்மானந்தம் - அனந்தகிருஷ்ணன்[2]
- எம். எசு. பாசுகர் - பேராசிரியர்[3][4]
- நீலிமா ராணி
பாடல்கள்
தொகுவித்யாசாகர் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன[5].
எண் | பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1 | கண்ணால் பேசும் பெண்ணே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:43 |
2 | காற்றின் மொழி | பல்ராம் | 05:52 |
3 | செவ்வானம் சேலையை | ஜாசி கிஃப்ட் | 04:45 |
4 | மௌனமே உன்னிடம் | ஸ்ரீநிவாஸ் | 01:16 |
5 | என் ஜன்னல் தெரிவது | கார்த்திக் | 00:56 |
6 | பேச மறந்தாயே | மது பாலகிருஷ்ணன் | 04:44 |
7 | காற்றின் மொழி | சுஜாதா மோகன் | 05:53 |
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "மொழி திரைப்பட விமர்சனம்". Sify Movies. Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
- ↑ "Brahmanandam shows humour has no boundary". indiaglitz.com. Archived from the original on 1 April 2016. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
- ↑ "Deserving reward". The Hindu. 23 October 2009 இம் மூலத்தில் இருந்து 6 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150106113847/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/deserving-reward/article3022067.ece.
- ↑ S. R. ASHOK KUMAR (7 January 2010). "My First Break: Neelima". The Hindu இம் மூலத்தில் இருந்து 4 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200704160529/https://www.thehindu.com/features/cinema/My-First-Break-Neelima/article16836383.ece.
- ↑ "மொழி திரைப்படத்தின் பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
வெளி இணைப்புகள்
தொகு- மொழி திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணைப்பு பரணிடப்பட்டது 2007-04-06 at the வந்தவழி இயந்திரம்
- மொழி ! ரவிசங்கரின் விமர்சனம்
- மொழி பரணிடப்பட்டது 2007-05-10 at the வந்தவழி இயந்திரம் யாஹூ! விமர்சனம்.
- Mozhi is pathbreaking - (ஆங்கில மொழியில்)