மோகன் ராய் (Mohan Rai) என்பவர் இந்திய நாட்டின் தமிழக முன்னாள் மட்டைப்பந்து ஆட்டக்காரர். இவர் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இருபத்து நான்கு ஆட்டங்களில் மெட்ராஸ் அணிக்காக 1955 முதல் 1963 ஆண்டுகளில் விளையாடியுள்ளார். இவர் ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது சிறப்பான பங்களிப்பானது 27 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 ஆட்டமிழப்பு செய்தது ஆகும். 1955-56 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது தென் மண்டல அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.[1][2]

இறப்பு தொகு

இவர் 4 நவம்பர் 2013 அன்று காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Mohan Rai". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2016.
  2. "Former Madras seamer Mohan Rai dies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2016.

மேலும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்ராய்&oldid=3702011" இலிருந்து மீள்விக்கப்பட்டது