மோகன் உப்ரீதி

மோகன் உப்ரீதி (Mohan Upreti) (1928-1997) என்பவர் ஒரு இந்திய நாடக இயக்குநர், நாடக ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர், இந்திய நாடக இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

மோகன் உப்ரீதி

குமாவோனியில் ஒரு பிரபலமான நபரான மோகன் உப்ரீதி ஆவார். குமாவோனி நாட்டுப்புற இசையின் புத்துயிர் பெறுவதற்கான அவரது மகத்தான பங்களிப்பிற்காகவும் பழைய குமாவோனி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறார்;[2] உப்ரீதி " பேடு பாகோ பரோ மாசா" பாடலுக்காக மிகவும் பிரபலமானவர்.

சுயசரிதை தொகு

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மோகன் உப்ரீதி 1928இல் அல்மோராவில் பிறந்தார், அங்கு அவர் தனது தொடக்கக் கல்வியையும் பெற்றார். அல்மோரா அப்போது ஒரு வினோதமான சிறிய நகரமாக இருந்தது, நைனிடால் மற்றும் சிம்லா போன்ற பிற மலைப்பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விரைவான வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இப்பகுதியில் எந்த வித வளர்ச்சியும் இவ்விடத்தை தீண்டவில்லை. இந்தச் சூழல்தான் 1937-ஆம் ஆண்டில் அல்மோராவில் தனது கல்வி நிறுவனத்தை உருவாக்க நடனக் கலைஞர் உதய் சங்கரை ஈர்த்தது.

பி. சி. ஜோஷி போன்ற தொழிற்சங்கத் தலைவர்களால் இவர் ஆழமாகப் பாதிக்கப்பட்டார், பின்னர் அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ( சிபிஐ ) முக்கியத் தலைவராகவும், உப்ரீதியின் வழிகாட்டியாகவும் ஆனார்.

கலைச் சமூகத்தின் தாக்கம் காரணமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதிபலிப்பாக 40 களில், இந்திய மக்கள் நாடக சங்கம் (IPTA) மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன. வளர்ந்து வந்த கலைச்சமூகத்தினுடைய தாக்கம் மோகன் உப்ரீதியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது லோக் கலகர் சங்கம் என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.[3]

தொழில் வாழ்க்கை தொகு

1940கள் மற்றும் 50களில் ஒரு இளைஞனாக, மோகன் உப்ரீதி உத்தரகாண்ட் முழுவதும், பிஎம் ஷாவுடன் பயணம் செய்து, அப்பகுதியில் வேகமாக மறைந்து வரும் நாட்டுப்புறப் பாடல்கள், இராகங்கள் மற்றும் பாரம்பரியங்களை சந்ததியினருக்காகப் பாதுகாக்க அவற்றைச் சேகரித்தார்.

1968-ஆம் ஆண்டில் டெல்லியில் அவர் நிறுவிய பார்வதிய கலா கேந்திரா (மலைகளின் கலை மையம்) போன்ற நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் குமாவோனி கலாச்சாரம் மற்றும் இசையை தேசிய கவனத்திற்கு கொண்டு வருவதில் உப்ரீதி முக்கிய பங்கு வகித்தார். இந்த நிறுவனம் குமாவோனி கலாச்சாரத்தில் வலுவாக வேரூன்றிய நாடகங்கள் மற்றும் கதைப்பாடல்களை உருவாக்குகிறது.[4] உண்மையில், பி.எம். ஷா மற்றும் மோகன் உப்ரீதி இருவரும் இணைந்து, உத்தரகாண்டில் நாடகக் கலையின் மறுமலர்ச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர் [5] இவர் பல ஆண்டுகளாக புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் (NSD) பீடத்தில் இருந்தார், மேலும் நாடகங்களையும் இயக்கினார். தேசிய நாடகப் பள்ளியிலிருந்த போது வெளியான இவரது மிகவும் பிரபலமான படைப்பு, ' இந்திர சபா ' நாடகம் ஆகும்.[6]

1980 -ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காவிய கதைப்பாடல் 'ராஜுலா மாலுஷாஹி' இவரது மிக முக்கியமான படைப்பு ஆகும், இது குமாவோனி நாட்டுப்புற கலாச்சாரம் பற்றி முன்னெப்போதும் வெளிப்படுத்தப்படாத நுண்ணிய கருத்தாக்கங்களை முன்வைத்தது. இவரது மற்ற முக்கியமான நாடகங்கள் 'நந்தா தேவி ஜாகர்' ஆகும்.[7] இந்த நாடகத்தினடிப்படையில் இவர் ஒரு திரைப்படம் தயாரித்தார். அதுமட்டுமின்றி, 'காசிராம் கோட்வால்' உட்பட பல நாடகத் தயாரிப்புகளுக்கும் அவர் இசையமைத்தார், ப்ரெக்ட்டின் திரீ பென்னி ஓபராவின் இந்துஸ்தானி பதிப்பிற்கான இவரது இசை மிகவும் பாராட்டப்பட்டதோடு இன்னும் அவரது சிறந்த படைப்புகளுள் ஒன்றாக நினைவில் உள்ளது.[8]

பாரம்பரிய இராமலீலை நாடகங்களுக்கு புத்துயிர் அளிக்கவும், நகர்ப்புறப் பார்வையாளர்களிடம் அவற்றைக் கொண்டு வரவும் இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ரஸ்கின் பாண்டின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரான 'ஏக் தா ரஸ்டி' [9] உட்பட 80 களில் இவர் பல தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கு இசையமைத்தார்.

இவர் 1997 -ஆம் ஆண்டில் புது தில்லியில் இறந்தார்.

குடும்பம் தொகு

இவர் 1969 -ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற நைமா கான் உப்ரீதியை மணந்தார் [10]

மேதைமை தொகு

ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளில், இவர் உருவாக்கிய பார்வதிய கலா கேந்திரா நிறுவனம் ஒரு புதிய நாடகத்தை வழங்குகிறது.

2004 ஆம் ஆண்டில், மோகன் உப்ரீதியின் உருவாக்கம், "பேடு பாகோ பரோ மாசா", குமாவோனைச் சேர்ந்த பிரசூன் ஜோஷியால், கோகோ-கோலா விளம்பரமான "தண்டா மட்லப் கோகோ கோலா" இல் பயன்படுத்தப்பட்டது. விளம்பரத்தில் "பஹாரி வழிகாட்டி" ட்யூனை முணுமுணுப்பது காட்டப்பட்டுள்ளது. குமாவோனி திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார விழாக்களில் இந்த பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது மற்றும் இப்போது பிரபலமான திறன்பேசியின் அழைப்பொலியாகவும் மாறியுள்ளது. இது குமாவோன் படைப்பிரிவின் அணிவகுப்புப் பாடலாகும்.

2006 ஆம் ஆண்டில், தேசிய நாடகப் பள்ளி, நாடக விமர்சகர் திவான் சிங் பஜேலியால் எழுதப்பட்ட “மோகன் உப்ரீதி - தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டது.

மேலும் படிக்க தொகு

  • திவான் சிங் பஜேலி, மோகன் உப்ரீதி: தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட், 2006, புது தில்லி, நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ,ISBN 81-8197-016-0 .
  • வித்யா சாகர் நௌடியல், மோகன் கதா ஜயேகா.
  • "மோகன் உப்ரேட்டி தனது குருவை எப்படி கண்டுபிடித்தார்: ஜோஷி, பிசி, தி ரிதாகர் எபிசோட்." 2000, சங்கீத நாடகம் 135/136: 27–46 .
  • உத்தரகாண்ட் கே கலா பிரதேதா மோகன் உப்ரீதி கா சங்கீதிக் யோக்தன் (பிஎச்.டி. இந்திரா கலா சங்கித் விஸ்வவித்யாலயா, கைராகர்) - டாக்டர். தீபா ஜோஷி
  • டாக்டர். தீபா ஜோஷி, *ஸ்மிருத்யோன் மெய்ன் மோகன் உப்ரீதி* மோகன் உப்ரீதி லோக் சமஸ்கிருதி கலா ஐவம் விஞ்ஞான சோத் சமிதி அல்மோராISBN 978-93-5267-271-4

மேற்கோள்கள் தொகு

  1. The Hindu, Jan 28, 2005
  2. "Personalities of Kumaon". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  3. "The Hindu, Nov 21, 2006". Archived from the original on மே 22, 2013. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 3, 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. Parvatiya Kala Kendra at Bharat Rang Mahotsav, 2005
  5. Indian Express, 6 June, 1998
  6. NSD plays பரணிடப்பட்டது 18 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  7. FILMS of Janapada Sampada, ignca
  8. The Indian Express, March 11, 1999
  9. Ek Tha Rusty
  10. NSD Graduates பரணிடப்பட்டது 18 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_உப்ரீதி&oldid=3931645" இலிருந்து மீள்விக்கப்பட்டது