மோதிலால் ஆசுவால்

மோதிலால் ஆசுவால் (Motilal Oswal) இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். ராஜஸ்தானில் சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1987 ஆம் ஆண்டில் ராம்தியோ அகர்வாலுடன் இணைந்து நிறுவிய மோதிலால் ஆசுவால் நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். [1]

மோதிலால் ஆசுவால்
பிறப்புபத்ரு, சிவானா, பார்மர், ராஜஸ்தான்
இருப்பிடம்மும்பை
படித்த கல்வி நிறுவனங்கள்பத்ரு அரசுப்பள்ளி, புனேவின் முதன்மை நிதி அலுவலர் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்
பணிமோதிலால் ஆசுவால் குழுவின் இணை - விளம்பரதாரர், தலைவர் & முதன்மை செயல் அலுவலர்
வலைத்தளம்
http://www.motilaloswal.com

விருதுகள் தொகு

1995 - 1999 இலிருந்து 5 வருட காலத்திற்கு நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தற்காக இவருக்கு இந்திய அரசு "இராட்டிரிய சம்மன் பத்ரா" என்ற விருதினை வழங்கியது. [2]

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் இவருக்கு "நிதிச் சேவைகளில் சிறந்த வணிக சாதனையாளர்" என்ற விருதை வழங்கியது. [3] புதுதில்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் ஆற்றியதற்காக "உத்யோக் ரத்தன் விருது" இவருக்கு வழங்கியது. [4]

பிராங்க்சைசிங் வேர்ல்ட் என்ற இதழ் வழங்கிய "தி ஹால் ஆஃப் ஃபேம் ஃபார் எக்ஸலன்ஸ் ஃபார் பிராங்க்சைசிங்" இல் இவருக்கு ஒரு பதவியும் வழங்கப்பட்டுள்ளது. [5] அரிமா சங்கத்தின் மூலம் இவர் "அர்த்தசாத்திரத்தின் வெற்றியாளர்" என்றும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மூலம் "நிதிச் சேவைகளில் சிறந்த வணிக சாதனையாளர்" விருதையும் பெற்றார். [6] ஜீ வணிக நிறுவனம் ஏற்பாடு செய்த 'இந்தியாவின் சிறந்த சந்தை ஆய்வாளர் விருதுகள் 2009' என்ற நிகழ்ச்சியில் இவருக்கு "இந்திய மூலதன சந்தைக்கு சிறப்பு பங்களிப்பு" விருது வழங்கப்பட்டது. [7]

சாதனைகள் தொகு

1995 - 1999 இலிருந்து 5 வருட காலத்திற்கு நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தற்காக இவருக்கு இந்திய அரசு "இராட்டிரிய சம்மன் பத்ரா" என்ற விருதினை வழங்கியது

அறங்காவலர் தொகு

இவர் பல்வேறு சமூக அமைப்புகளுடன் தொடர்பிலிருக்கிறார். இவர் சமண சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவராகவும், ராஜஸ்தான் வித்யார்த்தி கிரிகாவின் "அகர்வால்-ஆசுவால் சத்ரவாக்களின்" அறங்காவலராகவும் உள்ளார். [8]

படைப்பு தொகு

தி எசன்ஸ் ஆஃப் பிசினஸ் & மேனேஜ்மென்ட் மற்றும் தி எசன்ஸ் ஆஃப் லைஃப் என்ற இரண்டு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. " Motilal Oswal online trading" பரணிடப்பட்டது 2010-04-23 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-04-24.
  2. " Mr. Motilal Oswal was awarded the “Rashtriya Samman Patra” by Central Board of Direct Taxes for a period of 5 years from 1995 to 1999" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2009-03-09.
  3. "ICAI felicitates Motilal Oswal - Financial Express - New Delhi - 05-Feb-2009"
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2012-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. [1]
  6. [2]
  7. "Zee Business conclave on financial markets begins in Mumbai" பரணிடப்பட்டது 2012-09-13 at the வந்தவழி இயந்திரம்
  8. "Rajasthan Vidyarthi Griha".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிலால்_ஆசுவால்&oldid=3412765" இலிருந்து மீள்விக்கப்பட்டது