மோர்பி மாவட்டம்


மோர்பி மாவட்டம் (Morbi district) (குஜராத்தி: મોરબી જિલ્લો) 15 ஆகஸ்டு 2013இல் துவக்கப்பட்ட புதிய மாவட்டம். .[1] [2] இம்மாவட்டம் இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. மாவட்டத் தலைமையகம் மோர்பி நகரம்.

மோர்பி
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-36


15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

மோர்பி மாவட்டத்திற்கு, வடக்கே கட்ச் மாவட்டம், கிழக்கே சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே ராஜ்கோட் மாவட்டம், மேற்கே ஜாம்நகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்தொகு

குஜராத்தி மொழியில் மோர்பி எனில் மயில் எனப் பொருள். போஜ நாட்டு மன்னர் (king of Bhooj) மயில் எனப்பொருள் விளங்கும்படி இப்பகுதிக்கு மோர்பி எனப் பெயரிட்டார்.

மக்கள் வகைப்பாடுதொகு

மோர்பி மாவட்ட மக்கட்தொகை 10,07,954. பரப்பளவு 4871.5 சதுர கி. மீ., ஒரு சதுர கி. மீட்டருக்கு மக்கள்தொகை அடர்த்தி 207 நபர்கள்.

வருவாய் வட்டங்கள்தொகு

  1. மோர்பி
  2. மாலியா
  3. டங்காரா
  4. வான்கனேர்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்பி_மாவட்டம்&oldid=2046340" இருந்து மீள்விக்கப்பட்டது