ம. வரலட்சுமி

இந்திய அரசியல்வாதி

ம. வரலட்சுமி (M. Varalakshmi) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட செங்கற்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2016 ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள ஆப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் ப. மதுசூதனன் ஆவார். இவர் முன்னதாக கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றியுள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலில் இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கமலக்கண்ணன் போட்டியிட்டார்.[3]

ம. வரலட்சுமி
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தொகுதிசெங்கல்பட்டு
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில்
2016–2021
தொகுதிசெங்கல்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல் 1974 (1974-04-16) (அகவை 51)
அரசியல் கட்சிதிமுக
துணைவர்பி. மதுசூதணன்
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்
முன்னாள் மாணவர்அரசு செவிலியர் கல்லூரி, காஞ்சிபுரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "15th Assembly members". TN Goverrnment. Archived from the original on 2016-08-22. Retrieved 9 ஏப்ரல் 2019.
  2. "திராவிட முன்னேற்றக் கழகம் - மக்கள் பிரதிநிதிகள்". திராவிட முன்னேற்றக் கழகம். Retrieved 9 ஏப்ரல் 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் 2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு". விகடன். Retrieved 9 ஏப்ரல் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._வரலட்சுமி&oldid=3565886" இலிருந்து மீள்விக்கப்பட்டது