யப்பானியத் திரைப்படத்துறை

யப்பானியத் திரைப்படத்துறை

யப்பானியத் திரைப்படத்துறை (日本映画 Nihon eiga?, உள்நாட்டில் 邦画 ஓகா(hōga) எனும் " உள்நாட்டுத் திரைப்படம்") கிட்டதட்ட 100 ஆண்டு வரலாறு உடையதாகும். யப்பான் உலகிலேயே மிகவும் பழைமையானதும் பாரியதுமான திரைப்படத் தொழில்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். யப்பான் 2010 அளவில் உலகில் நான்காவது பேரெண்ணிக்கையில் திரைப்படங்களை உருவாக்கும் நாடாகும்.[5] யப்பான் 2011 இல் 411 திரைப்படங்களை வெளியிட்டது. இந்த ஆன்டில் அமெரிக்க திரைப்பட வருமானத்தைப் போல (2.338 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 54.9% வருமானத்தினை ஈட்டியது.[6] யப்பானில் முதல் வெளிநாட்டுப் படப்பிடிப்புத் தொழிலாளர் வந்த்தில் இருந்தே திரைப்படங்கள் 1897 முதலே வெளியிடப்படுகின்றன.யப்பான் நல்ல அயல்நாட்டு மொழிப் படங்களுக்காக நான்குமுறை விருதுகளைப் பெற்றுள்ளது. இது மற்ற ஆசியப் படங்களை விட அதிகமானதாகும்.

யப்பானியத் திரைப்படத்துறை
(இப்போது திரைப்படக் கோபே என வழங்கும்) கோபேவில் சிங்கேகி-கைகான்
திரைகளின் எண்ணிக்கை3,437 (2015)[1]
 • தனிநபருக்கு100,000 பேருக்கு 2.9 பேர் (2011)[2]
முதன்மை வழங்குநர்கள்Toho (32.6%)
Walt Disney (10.7%)
Toei Company (8.9%)[3]
Number of admissions (2015)
மொத்தம்166,630,000
நிகர நுழைவு வருமானம் (2015)
மொத்தம்217.119 பில்லியன் யப்பானிய யென்கள் (1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)[4]
தேசியத் திரைப்படங்கள்120.367 பில்லியன் யப்பானிய யென்கள் (55.4%)

வரலாறு தொகு

ஊமைப்படக் காலம் தொகு

 
ஓரோச் (பந்தாரோ புட்டகாவா)
 
ஔரோனிங்கா (மசாகிரோ மகினோ)

தாமசு எடிசன் 1894 இல் அமெரிக்காவில் வணிகவியலாக வெற்ரிகரமாக காட்டிய இயங்குபடம், யப்பானில் 1896 நவம்பரில் காட்டப்பட்டது. உயிர்ப்புப் படமும் உலூமியேர் உடன்பிறப்புகளின் திரைப்படமும் (Cinematograph) யப்பானில் முதலில் 1897 இல் காட்டப்பட்டன.[7] இவை இனபாட்டா கட்சுதாரோவால் காட்டப்பட்டன.[8] யப்பானில் முதைல் திரைப்படம் எடுத்தவர்கள் உலூமியேர் ஒளிப்படத் தொழிலாளர்களாகும்.[9] கென்ட்டோ எனும் மாயவிளக்கு படமெடுப்புக் கலையில் வல்லவர்களாகிய யப்பானியர்களுக்கு இந்த இயங்குபட முறை முற்றிலும் புதியதல்ல எனலாம்.[10][11] முதல் யப்பானியத் திரைப்படம் 1897 இல் டோக்கியோ நகரின் இயல்காட்சிகளை வெற்றிகரமாக எடுத்துக் காட்டியது.[12]

யப்பான் 1898 இல் சில பேய்ப்படங்களை எடுத்தது. இவற்றில் சிரோ அசுனோவின் குறும்படங்களாகிய பேக் யிழோ (Bake Jizo) (Jizo the Spook / 化け地蔵), [[சினின் நோ சோசேய் (Shinin no sosei) (சடலப் புத்துயிர்ப்பு) ஆகியன அடங்கும்.[13] முதல் ஆவணப்படம் 1899 ஜூனில் கெய்சா நோ தியோதோரி (Geisha no teodori) (芸者の手踊り) எனும் குறும்படம் எடுக்கப்பட்டது. திசுனேகிச்சி சிபாட்டா பல தொடக்க காலத் திரைப்படங்களை எடுத்தார். இவற்றில் 1899 இல் இரண்டு பெயர்பெற்ற நடிகரை வைத்து, நன்கு அறிமுகமாகிய காபுகி நாடகத்தின் காட்சியைக் கொண்ட மோமியிகாரி எனும் திரைப்படமும் அடங்கும். இது 1899 இல் பெரும்புகழை ஈட்டியது. தொடக்க காலத் திரைப்படங்கள் காபுகி, புன்றாகு ஆகிய மரபு நாடக அரங்கு வடிவத்தில் அமைந்தன.

இருபதாம் நூற்றாண்டின் விடியலில் யப்பானியத் திரையரங்குகள் கதைசொல்ல பென்ழ்சிக்களை வாடகைக்கு அமர்த்தின. இவரகள் மரபுவழிக் கதைசொல்லிகளாவர். இவர்கள் திரையருகே அமர்ந்து உம்மைப்படங்களின் கதைகளை எடுத்துரைத்தனர்ரிவர்கள் காபுகி, யோரூரி, கோதான், அரங்கு உரையாளர், வாய்மொழி கதைசொல்லிகள் ஆகிய மரபான கதைசொல்லிகளின் வழித்தோன்றல்கள் ஆவர் .[14] மேற்கத்தியத் திரைப்படங்களைக் காட்டும்போது இவர்களின் எடுத்துரைப்புகளோடு இசையும் கூடுதலாக அமைவதுண்டு. பிறகு 1930 களில் பேசும்படங்கள் உருவாகியதும், பென்ழ்சி போன்ற கதைசொல்லிகளின் பங்களிப்பு தேவைப்படவில்லை.

யப்பானியத் திரைப்பட முன்னோடி இயக்குநராகிய சோழோ மகினோ தன் திரைவாழ்க்கையை 1908 இல் யாகோட்டா சொகாய்க்காக கொன்னோயி காசன் (Honnōji gassen) (本能寺合戦) எனும் திரைப்படத்தில் தொடங்கினார். சோழோ மட்சுனசுகி ஒனியே எனும் முந்தைய காபுகி நடிகரைத் தன் படங்களில் நடிக்க தேர்வு செய்தார்ரொனியே யப்பானிய முதல் திரைப்பட நடிகரானார்; இவர் 1909 இல் இருந்து 1926 வரை 1000 குறும்படங்களில் நடித்தார்.ஈவர்கள் இருவரும் இடைகெக்கி (idaigeki) எனும் வகைத் திரைப்பட வடிவத்தை உருவாக்கினர்.[15] இதே கால கட்டத்தில் தோக்கிகிக்கோ பரவலாக சிறந்த காதல்நய நடிகராக ஏற்கப்பட்டார்.

யப்பானியத் திரைப்படங்களில் முதலில் நடன மங்கையாகவும் நடிகையாகவும் தோகுக்கோ நாகை தகாகி நடித்தார்; இவர் 1911 இல் இருந்து 1914 வரை அமெரிக்கத் திரைப்படக் குழுமமாகிய தானவுசர் குழுமத்துக்கு நான்கு குறும்படங்களில் நடித்தார்.[16]

 
கிந்தாரோ அயகாவா, 1910 களில் இருந்து 1920 கள் வரை ஆலிவுட்டில் பேசபடங்களில் நடித்த சிறந்த பெருநடிகரில் ஒருவர்.

யப்பானியத் திரைப்படங்களின் திறனாய்வு 1910 களில்தான் அறிவாளிகளிடைவளரலானது. பிறகு இது யப்பானியத் திரைப்படத் திறனாய்வு இயக்கமாக வளர்ந்தது. முதல் திரைப்பட இதழான கத்சுதோ சாழ்சிங்கை (Katsudō shashinkai) (1909 இல் தோன்றியது) போன்றவற்றில் இத்திறனாய்வுகள் வெளியாகின. யாசுனோசுகி கோந்தா 1914 இல் ஒரு முழுநீலத் திரைப்படத் திறனாய்வு நூலை எழுதி வெளியிட்டார். எனினும், பல திறனாய்வாளர்கள் நிக்காத்சு, தென்காத்சு போன்ற கலைக்கூடங்களின் பணியைத் தூய்மையாக்குவதிலேயே கவனத்தைக் குவித்தனர்.. இவர்கள் பென்ழ்சிகளைப் பயன்படுத்தும் மரபு அரங்கியல் கூறுகளான காபுகி, சின்பா வகைமைகளை பயன்படுத்துவதைக் கண்டித்து, கதைகளைக் கூறுவதற்குப் புதிய திரைப்பட நுட்பங்களைப் பயன்கொள்ளுமாறு வற்புறுத்தினர். இது பின்னர் தூய திரைப்பட இயக்கம் எனப் பெயரிடப்பட்டது. தூய திரைப்பட இயக்கம் கெந்தைகெக்கி வடிவத்தையும் திரைப்பட உரையாடலையும் வென்றெடுத்தது.[17]

திரைப்பட வருமானம் தொகு

ஆண்டு தொகு வருமானம்
(பில்லியன்
யென்களில்)
 ! ! உள்நாட்டு
பங்கு
ஏற்புகள்
(மில்லியனில்)
வாயில்கள்
2009 206 57% 169 [18]
2010 221 54% 174
2011 181 55% 144.73 [19][20]
2012 195.2 65.7% 155.16 [21]
2013 194 60.6% 156 [22][23]
2014 207 58% 161 [24][25]
2015 217.119 55.4% 166.63

மேற்கோள்கள் தொகு

  1. "Statistics of Film Industry in Japan". Motion Picture Producers Association of Japan. பார்க்கப்பட்ட நாள் 12 September 2016.
  2. "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
  3. "Table 6: Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics. Archived from the original on 16 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Frater, Patrick (April 13, 2016). "Asia Expands Domination of Global Box Office". Variety. பார்க்கப்பட்ட நாள் April 19, 2016.
  5. "Top 50 countries ranked by number of feature films produced, 2005–2010". Screen Australia. Archived from the original on October 27, 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-14.
  6. "Japanese Box Office Sales Fall 18% in 2011". Anime News Network. 2012-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
  7. Tsukada, Yoshinobu (1980). Nihon eigashi no kenkyū: katsudō shashin torai zengo no jijō. Gendai Shokan. 
  8. McKernan, Luke. "Inabata Katsutaro". Who's Who of Victorian Cinema. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.
  9. Eiga denrai: shinematogurafu to <Meiji no Nihon>. 1995: Iwanami Shoten. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:4-00-000210-4. 
  10. Iwamoto, Kenji (2002). Gentō no seiki: eiga zenʾya no shikaku bunkashi = Centuries of magic lanterns in Japan. Shinwasha. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-4-916087-25-6. 
  11. Kusahara, Machiko (1999). "Utushi-e (Japanese Phantasmagoria)". Media Art Plaza. Archived from the original on 28 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2009.
  12. Keiko I. McDonald (2006). Reading a Japanese Film: Cinema in Context. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-2993-3. https://books.google.com/?id=ICqSfjUqIpMC. 
  13. "Seek Japan | J-Horror: An Alternative Guide". Archived from the original on ஜூலை 22, 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 28, 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. Dym, Jeffrey A. (2003). Benshi, Japanese Silent Film Narrators, and Their Forgotten Narrative Art of Setsumei: A History of Japanese Silent Film Narration. Edwin Mellen Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7734-6648-7. 
  15. "Who's Who in Japanese Silent Films". Matsuda Film Productions. பார்க்கப்பட்ட நாள் 2007-01-05.
  16. Cohen, Aaron M. "Tokuko Nagai Takaki: Japan's First Film Actress". Bright Lights Film Journal 30 (October 2000). பார்க்கப்பட்ட நாள் 2007-01-05.
  17. See Bernardi.
  18. Patrick Frater (January 28, 2011). "Japanese box office climbs 7% in 2010". Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  19. Patrick Frater (January 27, 2012). "Japanese BO plunges by 18%". Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  20. Jason Gray (January 30, 2013). "Japanese box office up 7.7%". screendaily.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  21. Mark Schilling (January 30, 2013). "Japanese B.O. rises 7.7% to $2.14 bil". variety.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  22. Kevin Ma (29 January 2014). "Japan B.O. down 0.5% in 2013". Film Business Asia. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014.
  23. Gavin J. Blair (January 28, 2014). "Japan Box Office Drops Slightly in 2013". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  24. Gavin J. Blair (January 26, 2015). "Japan's Box Office Up 6.6 Percent to $1.75 billion in 2014". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  25. Mark Schilling (January 27, 2015). "Japan Box Office in 2014 is Third Biggest of 21st Century". variety.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.

நூல்தொகை தொகு

வெளி இணைப்புகள் தொகு