யாகூப் (நடிகர்)

இந்திய நடிகர்

யாகூப் கான் ( Yakub Khan; 3 ஏப்ரல் 1904 - 24 ஆகஸ்ட் 1958), பொதுவாக யாகூப் என்று அழைக்கப்படும் [1] [2] [3] இவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் ஒரு பஷ்தூன் குடும்பத்தில் பிறந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். [4] இவர் நகைச்சுவை மற்றும் நகைச்சுவையான வில்லன் பாத்திரங்களுக்கு மிகவும் பிரபலமானவர். [5]

யாகூப்
Yakub
பிறப்புயாகூப் கான்
(1903-04-03)3 ஏப்ரல் 1903
ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 ஆகத்து 1958(1958-08-24) (அகவை 55)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1924 – 1958
வாழ்க்கைத்
துணை
இலட்சுமிபென்

யாகூப், தனது வாழ்க்கையை துணைப் பாத்திரங்களுடன் தொடங்கினார். ஆனால் இறுதியில் மிக முக்கியமான பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடிக்கடி நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த அதே வேளையில், இவர் மிகவும் பிரபலமான திரை வில்லன்களில் ஒருவராக ஆனார்.[6] யாகூப் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[7]

இளமை வாழ்க்கை.

தொகு

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போன யாகூப், எஸ். எஸ். மதுரா என்ற கப்பலில் சமையலறை பணியாளராக சேருவதற்கு முன்பு வாகனம் சரிசெய்பவர் மற்றும் உணவகத்தில் பரிமாறுபவர் போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்தார். இலண்டன், பிரசெல்சு மற்றும் பாரிசு போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்ற பிறகு கப்பல் பனியை விட்டு வெளியேறிய இவர், பின்னர் கொல்கத்தாவுக்குத் திரும்பினார். அங்கு சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில், யாகூப் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு சார்தா திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

தனது பயணங்களின் போது, யாகூப் அமெரிக்கத் திரைப்படங்களைப் பார்த்தார். மேலும் எடி போலோ, டக்ளஸ் பேர்பேங்க்ஸ் சீனியர், வாலஸ் பீரி மற்றும் பின்னர் ஹம்பிரி போகார்ட் ஆகியோரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மாஸ்டர் விட்டல் நடித்த பாஜிராவ் மஸ்தானி (1925) என்ற ஊமைத் திரைப்படம் யாகூபின் முதல் படமாகும். மேரி ஜான் (1931) என்ற பேசும் படத்தில் இளவரசராக நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. பின்னர் ஔரத் (1940) படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது.[8] யாகூப்பின் புகழை எஸ். கே. ஓஜா இயக்கிய ஹுல்சுல் (1951) போன்ற படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிபடுத்தினார். இதில் திலிப் குமார், நர்கிசு மற்றும் சித்தாரா தேவி போன்ற நட்சத்திர நடிகர்களும் இருந்தனர்.

பி. கே. கரஞ்சியா இணைந்து திருத்திய புத்தகமான “இந்தியத் திரைப்படங்களின் வரிசை” என்ற புத்த்கத்தில் ஜானி வாக்கர், கோப் மற்றும் அகா போன்ற பிற நடிகர்களுடன் யாகூப், அங்கீகரிக்கப்பட்ட நகைச்சுவை நடிகராக இடம்பெற்றுள்ளார்.[8][9] கோப் மற்றும் அகா ஆகியோருடனான இவரது நகைச்சுவை பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. அவர்கள் அனைவரும் பல படங்களில் ஒன்றாக தோன்றினர். உதாரணமாக, சாகாய் (1951) பதங்கா (1949) மற்றும் பெகசூர் (1950) போன்றவை.[10] 1930 முதல் 1950 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் யாகூப் ஒருவராக இருந்தார்.[8]

இறப்பு

தொகு

யாகூப் தனது 54 வயதில் மும்பையில் ஆகஸ்ட் 24,1958 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Yakub (interview conducted in 1954)". Cineplot.com website. Archived from the original on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 20 September 2023.
  2. "Yakub filmography". Complete Index To World Film (CITWF) website. Archived from the original on 24 December 2016. பார்க்கப்பட்ட நாள் 20 September 2023.
  3. Stars of The Indian Screen-by Sushila Rani Baburao Patel Parker and Sons 1952
  4. Encyclopedia of Hindi Cinema, edited by Gulazara, Govind Nihalani, Saibal Chatterjee. Yakub pg.638 Popular Prakashan 2003
  5. Eena Meena Deeka: The Story of Hindi Film Comedy by Sanjit Narwekar 2005 Rupa பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-291-0859-3
  6. Encyclopedia of Hindi Cinema, edited by Gulzar, Govind Nihalani, Saibal Chatterjee. Yakub pg.638
  7. "Yakub (interview conducted in 1954)". Cineplot.com website. Archived from the original on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 20 September 2023.
  8. 8.0 8.1 8.2 "Yakub (interview conducted in 1954)". Cineplot.com website. Archived from the original on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 20 September 2023.
  9. Genres of Indian Cinema edited by B. K. Karanjia, pg 82. Digitized 26 April 2008. Original from The University of California
  10. Eena Meena Deeka: The Story of Hindi Film Comedy by Sanjit Narwekar 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-291-0859-3

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூப்_(நடிகர்)&oldid=4134829" இலிருந்து மீள்விக்கப்பட்டது