யார் (திரைப்படம்)

யார் (Yaar) 1985 ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.

யார்
இயக்கம்சக்தி கண்ணன்
தயாரிப்புஎஸ். தாணு
ஜி. சேகரன்
பி. சூரி
கதைஜி. சேகரன்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புஅர்ஜூன்
ஜெய்சங்கர்
நிழல்கள் ரவி
நளினி
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

பேய்ப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அனைத்து 8 கிரகங்கள் பூமி அருகில் ஒரே நேர்க்கோட்டில் அமையும் அமானுஷ்ய நேரத்தில் ஒரு அதிசயம் நடக்கிறது. அதே நேரத்தில் ஒரு மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தையின் தாயார் குழந்தை பிறந்த பிறகு உடனடியாக இறந்து விடுகிறார். அனாதை சிறுவன் ராஜாராமன் (ஜெய் சங்கர்) என்ற பணக்காரர் ஒருவரால் தத்து எடுத்து வளர்க்கப்படுகிறான்.சிறுவன் ராஜா, ஒரு சாதாரண குழந்தையாக இருக்கும்வரை இயல்பாகவே இருக்கிறார். எந்த பிரச்னையும் இல்லாமல் வளரும் ராஜா, கல்லூரி செல்லும் பருவம் அடைகிறார். ஆனால் அவருக்குப் பதினெட்டு வயதானதும், விசித்திரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. அவை நடப்பதற்கு காரணம் ராஜாதான் என்றும் மற்றும் ராஜா சாத்தானின் மகன் என தெரிய வருகிறது. ராஜா வழியில் குறுக்கிட்டு நிறுத்த, தீய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் இருவர் ஜகன் (அர்ஜுன்) மற்றும் தேவி (நளினி). ராஜாவின் ரகசியம் தெரிந்த எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகின்றனர். அவை மந்திரம் மூலம் செய்யப்பட்ட கொலைகள். ஜகன்,தேவி இருவரும் பிசாசு செய்யும் தீய செயல்களுக்குத் தடைபோட்டு நிறுத்த வேண்டுமானால் கடவுள் சக்தியைத் திரும்பப் பெறவேண்டும் மற்றும் ராஜாவைக் கொல்ல ரகசியம் வைத்திருக்கும் ஒரு முனிவர் யாரெனக் கண்டறிய வேண்டும். உலகத்தைச் சாத்தானின் இருளில் இருந்து காப்பாற்ற செய்யும் முயற்சியில், ராஜா பிசாசுக் குழந்தையை உருவாக்க முயலும்போது ஜகன், தேவி தடுத்து நிறுத்தினார்களா, தாமதத்தால் அவர்களுக்குத் தோல்வியா என்பதே படத்தின் முடிவு.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யார்_(திரைப்படம்)&oldid=3712261" இலிருந்து மீள்விக்கப்பட்டது