1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும்.

1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வின் போது இறந்தவர்களுக்கான நினைவிடம்
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் is located in இலங்கை
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
இடம்யாழ்ப்பாணம், இலங்கை
ஆள்கூறுகள்9°40′N 80°00′E / 9.667°N 80.000°E / 9.667; 80.000ஆள்கூறுகள்: 9°40′N 80°00′E / 9.667°N 80.000°E / 9.667; 80.000
நாள்ஜனவரி 10, 1974 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழர்
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)9
காயமடைந்தோர்50
தாக்கியோர்இலங்கை காவற்றுறை

வெளி இணைப்புகள்தொகு