யியோங் கியூ

யியோங் கியூ (Jiong Qiu) (邱炯) சினாவில் பிறந்த அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் தன் சூரியத் தணற்கொழுத்துகள் ஆய்வுக்காக்க் காரன் ஆர்வே (Karen Harvey) பரிசைப் பெற்றார்.

கல்விப்பணி தொகு

இவர் சீனாவில் யியாங்சுவில் உள்ள நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் 1993 இல் வானியலில் இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு முனைவர் பட்டம் அதே பல்கலைக்கழகத்தால் இவரது சூரியத் தணல்வீச்சு குறித்த நோக்கீட்டு ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இவ்விரு பட்டங்களையும் பெறுவதற்கு இடையிலான காலத்தில், அதாவது 1996 முதல் 1997 வரையிலான காலத்தில், இத்தாலியில் அமைந்த அர்செட்ரி வானியற்பியல் நோக்கீட்டகத்தில் பணிபுரிவதற்கான மாணவ ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார்.

இவர் தன் முனைவர் பட்டத்தை முடித்ததும், சூரியத் தணல் உமிழ்வு குறித்து உயராய்விலும் நேர்டியாக புவிச்சுடர் நோக்கீட்டு ஆய்வுவழி புவி வளிமண்டலத்தைக் கண்காணிப்பைத் தொடங்கவும், கலிபோரியாவில் உள்ள பெருங்கரடி சூரிய வான்காணகத்தின் முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்றார்.

இவர் 2005 இல் மாண்டானா, போசுமனில் அமைந்த மாண்டானா பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையில் உதவிப் பேராசிரியர் ஆனார்.[1]

அறிவியற்பணி தொகு

இவர் கதிர் இயற்பியல், கதிர் இயங்கியல், வளிமண்டலப் புலங்களில் அரிய ஆய்வுப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் இப்போது மாண்டனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் சூரிய இயற்பியல் குழுவில் பணிபுரிகிறார். இவரது ந்டப்பு ஆராய்ச்சி ஆர்வங்களாவன பின்வருமாறு:[2]

  • பேரியல் சூரியக் காந்த மீள்கட்டமைப்பு
  • சிற்றளவு செயல்முனைவு வட்டார ஆற்றல் வெளியீடு நிகழ்ச்சிகள்
  • சூரியத் தணல் உமிழ்வுச் சூழலில் துகள் முடுக்கம்
  • சூரியத் தணல் உமிழ்வுகள், செயல்முனைவு வட்டரங்களின் இயங்கியல்
  • புவிக்கோளக வளிமண்டல மாற்ற புவிச்சுடர் அளவீடுகள்

இவரது அண்மைய ஆய்வு சூரிய தணல் உமிழ்வு நிகழ்ச்சிகளிலும் இந்த வெடிப்பு நிகழ்ச்சிகளின்காந்தவியல் மீளிணைவு பற்றிய புரிதலிலும் அமைந்துள்ளது. இப்பணிக்காக இவர் புவியில் உள்ள தொலைநோக்கிகளையும் செயற்கைக்கோளில் அமைந்த தொலைநோக்கிகளையும் பயன்படுத்துகிறார்.

விருதுகள் தொகு

தேசிய அறிவியல் அறக்கட்டளை, நாசா ஆகிய அமைப்புகளில் இருந்து ஆய்வுநல்கைகளைப் பெற்றது மட்டுமன்றி, இவர் 2007 ஆம் ஆண்டுக்கான கரன் ஆர்வே பரிசையும் இவரது சூரியன் குறித்த அறிவியல்முறைப் புரிதலுக்கான பெரும்பங்களிப்புகளுக்காகவும் புவி வளிமண்டலம். புவிக் காலநிலை மீதான சூரியனின் விளைவுகளை ஆய்வு செய்த்தற்காகவும் பெற்றுள்ளார்.[3]

வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Biographical Sketch". Montana State University College of Letters and Sciences.
  2. "Jiong Qiu". Montana State University Solar Physics Division.
  3. J.B. Gurman (9 June 2016). "Previous Winners of the Karen Harvey Prize". American Astronomical Society Solar Physics Division. Archived from the original on 26 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யியோங்_கியூ&oldid=3588004" இலிருந்து மீள்விக்கப்பட்டது