யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு
யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு (Uranium zirconium hydride) என்பது UZrH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம்|சேர்மமாகும்.]] யுரேனியம் ஐதரைடும் சிர்க்கோனியம்(II) ஐதரைடும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பயிற்சி, ஆராய்ச்சி, ஐசோடோப்புகள், பொது அணுவியல் ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இதை பெருமளவில் தயாரிக்கிறது. UZrH எரிபொருளானது பல்கலைக்கழகங்களில் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சி உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. உலையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, வினைத்திறன் வேகமாக குறைகிறது.[1] பெரிய, உடனடி வினைத்திறன் எரிபொருள் வெப்பநிலை குணகத்தை இவ்வினை கொண்டுள்ளது.
பிரான்சு நாட்டின் ரோமன்சு-சுர்-இசேரில் உள்ள பிராங்கோ-பெல்ச்சு டி ஃபேப்ரிகேசன் டு கம்பசுடிபிள் என்ற நிறுவனம் மட்டுமே இந்த எரிபொருளின் ஒரே உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]