யுவராஜ் தயாளன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
யுவராஜ் தயாளன் (பிறப்பு 22 பிப்ரவரி 1987) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1]
யுவராஜ் தயாளன் | |
---|---|
பிறப்பு | 22 பெப்ரவரி 1987 செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | நுங்கம்பாக்கம், சென்னை, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது வரை |
திரை வாழ்க்கை
தொகுயுவராஜ் தயாளன் தமிழ்நாட்டின் செங்கல்பட்டைச் சார்ந்தவர். சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தை எம். ராஜா இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குநராகவும், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் திரைப்படத்தின் வாயிலாகச் சிறப்பாக அறியப் பெற்றார். இவரது தந்தையின் பெயர் தீனதயாளன் ஆகும்.
திரைப்பட விபரங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2011 | போட்டா போட்டி | தமிழ் | |
2014 | தெனாலிராமன் | தமிழ் | |
2015 | எலி | தமிழ் | |
2023 | இருகப்பற்று | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ "Yuvaraj Film Director & Film Maker". பார்க்கப்பட்ட நாள் 2013-03-16.