யூபு தீவு (Yubu Island) சப்பான் நாட்டின் யாயாமா தீவுகளிள் அமைந்துள்ள ஒரு தீவாகும். இரியோமோட் தீவுக்கு கிழக்கில் 0.5 கிலோமீட்டர் தொலைவில் யூபு தீவு அமைந்துள்ளது. துணை வெப்பமண்டல தாவரவியல் பூங்கா இத்தீவின் பெரும்பகுதியில் உள்ளடங்கியுள்ளது.

யூபு தீவு
Yubu Island
உள்ளூர் பெயர்: (由布島 Yubu-jima?)
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்24°20′42″N 123°56′06″E / 24.34500°N 123.93500°E / 24.34500; 123.93500
தீவுக்கூட்டம்யாயாமா தீவுகள்
பரப்பளவு0.15 km2 (0.058 sq mi)
உயர்ந்த ஏற்றம்1.9 m (6.2 ft)
நிர்வாகம்
சப்பான்

புவியியல் மற்றும் போக்குவரத்து

தொகு
 
யூபு தீவின் தெருக் காட்சி
 
இரியோமோட் தீவுக்கும் யூபு தீவுக்கும் இடையே மக்களை ஏற்றிச் செல்லும் தண்ணீர் எருமை வண்டிகள்

யூபு தீவு 0.15 கிமீ 2 பரப்பளவும் 2.0 கிமீ சுற்றளவும் கொண்ட ஒரு சிறிய தீவு ஆகும். இது இரியோமோட் தீவில் இருந்து கிழக்கே 0.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யூபு தீவுக்கும் இரியோமோட் தீவுக்கும் இடையே உள்ள நீர்மட்டம் பொதுவாக முழங்கால் ஆழத்திற்கு மேல் இருக்காது. அதிக அலையின் போது கூட நீர்மட்டம் சுமார் 1 மீட்டர் ஆழத்தில் இருக்கும். நீர் எருமை வண்டிகள் யூபு தீவுக்கும் இரியோமோட் தீவுக்கும் இடையே போக்குவரத்துக்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இதுவே தீவின் முக்கிய சுற்றுலா அம்சமாகவும் மாறியுள்ளது. குறைந்த அலையாக இருக்கும்போது அலைகள் அமைதியாக இருக்கும். இந்நேரத்தில் தீவுகளுக்கு இடையே நடந்தே செல்ல முடியும். இரியோமோட் தீவு முதல் யூபு தீவு வரையிலான கடலில் நடை போக்குவரத்துக்கு வழிகாட்டும் வகையில் பயன்பாட்டுக் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு தாவரவியல் பூங்கா தீவின் பெரும்பகுதி முழுவதுமாக உள்ளடங்கியுள்ளது. [1]

வரலாறு

தொகு

பசிபிக் போருக்குப் பிறகு, 1947 ஆம் ஆண்டு டேக்டோமி தீவு மற்றும் குரோசிமா தீவிலிருந்து இரியோமோட் தீவுக்கு குடிபெயர்ந்த மக்கள், யூபு தீவில் ஒரு குடியேற்றத்தை நிறுவினர். பழ மரங்கள் மற்றும் கரும்புகள் பயிரிடப்பட்டன, நீர் எருமைகள் வளர்க்கப்பட்டன. [1]

1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று எல்சி சூறாவளி யூபு தீவைத் தாக்கியது. இதனால் தீவின் பெரும்பாலான மக்கள் விரைவில் இரியோமோட் தீவுக்குச் சென்றனர். [1]

ஏப்ரல் 1, 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று தீவில் துணை வெப்பமண்டல தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. இந்தத் தோட்டம் படிப்படியாக விரிவடைந்து தீவின் பெரும்பகுதியை நிரப்பியது. இரியோமோட்டின் தாவரவியல் பூங்கா மற்றும் நீர் எருமை வண்டி சவாரிகள் காரணமாக தீவு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு பிரபலமான சுற்றுலா மையமாக மாறியது. [1] 2017 ஆம் ஆண்டில், ஏறக்குறைய 201,600 சுற்றுலாப் பயணிகள் யூபுவிற்கு வருகை தந்தனர். ஒரே நாளில் உச்சமாக 1,117 பேர் வருகை தந்தனர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 The Yubu Island Subtropical Botanical Garden (2021-09-28). "由布島の歴史" (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  2. Taketomi Town (May 4, 2020). "竹富町地区別人口動態票(令和2年3月末)" (PDF). Archived from the original (PDF) on 2020-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபு_தீவு&oldid=3491084" இலிருந்து மீள்விக்கப்பட்டது