யோகா தில்லைநாதன்

யோகா தில்லைநாதன் ஒரு வானொலிக் கலைஞர். சிறந்த நாடகக் கலைஞர். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். குழந்தைக் கலைஞராக தனது ஐந்தாவது வயதிலேயே இலங்கை வானொலியில் இணைந்து கொண்டவர். 1966 இல் பகுதிநேர அறிவிப்பாளராக தமிழ் வர்த்தக சேவையில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், மணி மலர், இசையும் கதையும், போன்ற பல நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக இருந்தவர். 35 ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் அதனையே தனது முழுநேரத் தொழிலாக ஏற்றுப் பணியாற்றியவர். இவர் 1985 இல் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து 1988 இல் ஸ்பெக்கரம் அனைத்துலக வானொலியிலும், 1989 இல் சன்றைஸ் வானொலியிலும் தனது தனித்துவமான தமிழ்சேவையை ஆரம்பித்தவர். இவரது கானக்குயில் நிகழ்ச்சி சர்வதேசப் புகழ் பெற்றது.[1]

நடித்த திரைப்படம்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்சான்றுகள்தொகு

  1. "ஒலிபரப்புக் கலையில் 35 வருடங்கள் 'கானக்குயில்' யோகா தில்லைநாதன் (தமிழர் தகவல் கனடா, பெப்ரவரி 2001 பக்கம்:123)". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
  2. http://www.thainaadu.com/read.php?nid=1350727683#.VUOF65PLITY[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.pesaamoli.com/mag_31_itc_11.php[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகா_தில்லைநாதன்&oldid=3371779" இருந்து மீள்விக்கப்பட்டது