யோமடின் (2018 திரைப்படம்)
யோமடின் (Yomeddine) (தமிழ் : தீர்ப்பு நாள்) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த எகிப்திய திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குனர் அபு பக்கர் ஷாசி ஆவார். இப்படம் 2018 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. அந்த ஆண்டின் ஆஷ்கருக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டு பின்னர் அனுப்பpபடவில்லை. [1][2]
யோமடின் | |
---|---|
இயக்கம் | அபுபக்கர் |
தயாரிப்பு | டிமாஏமம் |
வெளியீடு | 9 மே 2018(Cannes) |
ஓட்டம் | 93 நிமிடங்கள் |
நாடு | எகிப்து |
மொழி | அராபிக் |
கதைதொகு
எகிப்து நாட்டில் தொழுநோயாளிகள் தங்கும் இடத்தில் சிறு பையனை அவனது அப்பா தங்கவைத்துவிட்டுச் செல்லுகிறார். அவன் குணமடைந்த போதும் அவனின் அப்பா வந்து அழைத்துச்செல்லவே இல்லை. அவனின் முகத்தில் தொழுநோயின் தழும்புகளும், மடக்கிய விரல்களையும் கண்டு யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. அவன் தன்னைப் போன்ற ஒரு பெண்ணை மணமுடிக்கிறான். கொஞ்ச நாட்களிலேயே அவளும் இறந்துவிட தான் இருக்கும் எகிப்தின் வடகோடியிலிருந்து தென்கோடியில் இருக்கும் தனது கிராமத்திற்கு வண்டியில் பயணப்படுகிறான். இவனை அந்த ஊரில் உள்ள சொந்தங்கள் ஏற்றுக்கொண்டாலும் அங்கு இருக்க மனமில்லாமல் ஊரைவிட்டு வெளியேருகிறான்.
மேலும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "رسميًا.. «يوم الدين» يمثل مصر في الأفلام المرشحة لـ«أوسكار". Almasryalyoum. 12 September 2018. 12 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kozlov, Vladimir (13 September 2018). "Oscars: Egypt Selects 'Yomeddine' for Foreign-Language Category". The Hollywood Reporter. 13 September 2018 அன்று பார்க்கப்பட்டது.