யோஷிடாகா தொராடா
யோஷிடாகா தொராடா (15 மே 1954 - 29 மார்ச் 2023, Yoshitaka Terada) என்பவர் சப்பானிய இசை ஆய்வாளரும், எழுத்தாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் சப்பானின் ஒசாகா தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம், சில அமெரிக்க, செர்மன், சப்பானிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார்.[1] தமிழர்களாலும், தமிழிசையாலும் ஈர்க்கபட்டு தன் பெயரை மதி தொரடா என கூறிக்கொண்டவர்.
யோஷிடாகா தொராடா | |
---|---|
பிறப்பு | 15 மே 1954 ஐஸ் |
இறப்பு | 29 மார்ச் 2023 (அகவை 68) |
படிப்பு | முனைவர், முதுகலை |
படித்த இடங்கள் |
|
யோஷிடாகா தொராடா ஐரோப்பிய செவ்வியலிசை, ஜாஸ், இந்துஸ்தானி இசை, தமிழிசை ஆகியவற்றில் ஆழமான அறிவு கொண்டவர். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு விளிம்புநிலை மக்கள், பழங்குடிகள் போன்றோரின் இசையையும், கலை வடிவங்களையும் பதிவு செய்வதிலும் அவர்களின் இசைக் கருவிகளையும், கலைப்படைப்புகளையும் சேகரித்து தான் பணியாற்றிய அருங்காட்சியகத்தில் சேர்ப்பித்து ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டவர்.
தமிழ்நாட்டில் கருநாடக இசைத் துறையில் நிலவும் சாதி ஆதிக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். பெரியமேளத்தின் மீது மிக ஆர்வம் கொண்டு நாகசுரத்தை நன்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். பெரிய மேளத்தின் மறைவு என்ற தலைப்பை தன் முனைவர் பட்ட ஆய்வுக்கான கருப்பொருளாகக் கொண்டார்.[2]
எழுதிய நூல்கள்
தொகு- Ethnomusicology and Audiovisual Communication (2016)
- T.N. Rajarattinam Pillai Charisma, Caste Rivalry and the Contested Past in South Indian Music (2023)[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Terada Yoshitaka (1954-2023): The man from Japan who played the nagaswaram, frontline, 30 மார்ச் 2023
- ↑ எஸ். வி. ராஜதுரை, அஞ்சலி: யோஷிடாகா தெராடா, ஜப்பானிய அறிஞரின் பெரிய மேளம் மீதான தீராக் காதல், இந்து தமிழ், 2 ஏப்ரல் 2023
- ↑ An instrument of change: Review of ‘T.N. Rajarattinam Pillai’ by Terada Yoshitaka, frontline, 10 ஆகத்து 2023