முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரஃஸ் அல்-கைமா

ராஸ் அல் கைமாவின் கொடி

ரஃஸ் அல்-கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 250,000 ஆகும். இந்த அமீரகம் சுருக்கமாக ராக் சிட்டி என்று அழைக்கப்படுகின்றது.

சகுர்அல் காசிமி பின் முகம்மது அல் காசிமி 27-10-2010 அன்று இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சேக் சவூத் பின் சகுர் அல் காசிமி அரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.[1]

கலாச்சாரம்தொகு

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இசுலாமிய மதத்தையும் பாரம்பரிய அரபு கலாச்சாரத்தையும் பின்பற்றும் நாடாகும். இஸ்லாமிய மற்றும் அரபு கலாச்சாரத்தின் தாக்கம் அதன் கட்டிடக்கலை, உடை, உணவு என்பன வாழ்க்கை முறைகளில் பிரதிபலிக்கின்றன.

நகரங்களும் குடியேற்றங்களும்தொகு

முக்கியமான நகரங்களும், குடியேற்றங்களும் பின்வருமாறு:

  • ராக் நகரம் - அமீரகத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும்.
  • அல் ஜசிரா அல் ஹம்ரா - அல் ஹம்ரா கிராம வளர்ச்சி மற்றும் ஒரு தொழில்துறை மண்டலத்திற்கு சொந்தமான ஒரு பழைய கடலோர நகரம் ஆகும்.
  • ராம்ஸ் - ஒரு கடலோர நகரம் கடந்த காலத்தில் ஒரு பொதுவான மீன்பிடி மற்றும் முத்துக்குளிக்கும் இடமாகும்.
  • கோர் குவைர் - ஒரு தொழிற்துறை மண்டலம் மத்திய கிழக்கில் மிகப் பெரிய கையாளுதல் துறைமுகம் மற்றும் சீமேந்து தொழிற்சாலைகள் போன்ற ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
  • டிக்டாக்கா - விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும்.
  • காட் - மலைகளால் சூழப்பட்ட ஒரு கிராமம். இது வெப்ப நீரூற்றுகள் மற்றும் பனை தோட்டங்களுக்கு பிரபலமானது.
  • மசாபி - புஜைராவின் எல்லையில் அமைந்துள்ள நகரமாகும். பாட்டில் குடிநீரின் முக்கிய விநியோக நகரமாக அறியப்படுகிறது.

பொருளாதாரம்தொகு

ராஸ் அல் கைமா எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படாத அமீரக நகரம் ஆகும். இந் நகரம் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதுடன் அதன் வளர்ந்து வரும் தொழிற்துறைகளில் வெற்றி அடைந்துள்ளது. முக்கிய பொருளாதார துறைகள் பின்வருமாறு:

நில உடைமைகள் : ராஸ் அல் கைமாவில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள், வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பல முக்கிய முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன.

சுற்றுலாத் துறை : ராஸ் அல் கைமா வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலமாகும். இங்கு உலகின் மிக நீளமான ஜிப்லைன் சாகச பூங்கா அமைக்கப்பட இருக்கின்றது.[2] ஏராளமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் கடற்கரை ரிசார்ட்டுகளும் காணப்படுகின்றன.

கட்டுமானத் துறை : ராஸ் அல் கைமாவில் 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் சீமெந்து நிறுவனம் திறக்கப்பட்டது. இப்போது இங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய சீமேந்து உற்பத்தி நடைப்பெறுகின்றது. 1980 ஆம் ஆண்டுகளில் மட்பாண்ட தொழில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்சமயம் மட்பாண்ட தொழிலில் சிறந்து விளங்குகின்றது.[3]

உயர் தொழில்நுட்ப துறை - 1980 ஆம் ஆண்டுகளில் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜூல்பரை எமிரேட் நிறுவப்பட்டது. ஜூல்பர் இப்போது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமாக திகழ்கின்றது.[4] 2012 ஆம் ஆண்டில், உயர்நிலை கலப்பு தயாரிப்புகளை (விண்வெளி, கட்டுமான பாகங்கள்) உற்பத்தி செய்வதற்கான தொழிற்துறை நிறுவப்பட்டது.[5]

சேவைத் துறை : சமீபத்தில் வளர்ந்து வரும் துறைகளாக ராக் வங்கி மற்றும் ஆர்ஏக் காப்பீட்டு நிறுவனங்கள் காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு சனவரியில் ராக் வங்கி 917.5 மில்லியன் அரபு அமீரக திர்ஹம் இலாபத்தை பதிவு செய்தது.[6]

விவசாயம் மற்றும் மீன்வளம் : கடந்த காலத்தில் இவை ராஸ் அல் கைமாவின் முக்கிய பொருளாதாரத் துறைகளாக இருந்தன. தற்சமயம் மேலும் அபிவிருத்தியடைந்துள்ளன. இந்த அமீரகத்திற்கு மட்டுமல்லாமல் முழு ஐக்கிய அரபு அமீரமங்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்குகின்றன.

காலநிலைதொகு

ராஸ் அல் கைமாவின் கோப்பனின் காலதிலை வகைப்பாட்டின் அடிப்படையில் வெப்பமான பாலைவன காலநிலையை கொண்டுள்ளது. கோடையில் 45 ° C ஐ அடைகிறது. அதிக வெப்பநிலை 48.8 ° C (119.8 ° F) ஆகும். பொதுவாக கோடை மாதங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மழை மற்றும் இடியுடன் கூடிய மழை அரிதாகவே நிகழ்கிறது. ராஸ் அல் கைமாவின் உயரமான மலைகளில் டிசம்பர் 2004, சனவரி 2009 மற்றும் பிப்ரவரி 2017  ஆகியவற்றில் பனி பதிவாகியுள்ளது.[7] ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான ஜெபல் ஜெய்ஸின் உச்சத்தில் −5 ° C (23 ° F) வெப்பநிலை அளவிடப்பட்டுள்ளது.[8]

புள்ளிவிபரங்கள்தொகு

1975 ஆம் ஆண்டில் ராஸ் அல் கைமாவின் மொத்த மக்கட் தொகை 43,845 ஆக காணப்பட்டது. அவர்களில் 29,613 பேர் உள்நாட்டினரும், 14,232 பேர் வெளிநாட்டினரும் ஆவார்கள். இந்த எண்ணிக்கை 1980 ஆம் ஆண்டில் 73,918 ஆகவும் (39,148 உள்ளூர்வாசிகள், 34,770 வெளிநாட்டினர்), 1985 ஆம் ஆண்டில் 96,578 ஆகவும், 1995 ஆம் ஆண்டில் 143,334 ஆகவும் காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் 210,063 ஆக அதிகரித்துள்ளது.[9]

மூலம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஃஸ்_அல்-கைமா&oldid=2843259" இருந்து மீள்விக்கப்பட்டது